ஓவியாவின் காதலை அவமானப்படுத்திய ஆரவ்?

Report Print Tony Tony in பொழுதுபோக்கு
0Shares
0Shares
lankasrimarket.com

ஆரவ் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மிகவும் பிரபலமாகிவிட்டார். பல படங்களில் நடிக்க இவருக்கு வாய்ப்பு வந்துக்கொண்டு இருக்கின்றது.

இந்நிலையில் இவர் சமீபத்தில் பிரபல வார இதழ் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார், அதில் ஓவியா உங்களை உண்மையாகவே காதலித்தாரா? என்று கேட்டுள்ளனர்.

அதற்கு ஆரவ் ‘எனக்கு தெரியவில்லை. அதை அவர்கள் கிட்டத்தான் கேட்கணும். எனக்கு எதுவும் ஃபீல் ஆகவில்லை’ என்று கூறியுள்ளார்.

இதன் மூலம் ஓவியா காதல் உண்மையில்லை என்பது போல் அவர் கூறியது ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், கண்டிப்பாக ஓவியாவுடன் நடிப்பதாக இருந்தால் நான் ரெடி என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்