பிரபல நடிகர் கார் டிரைவராக! 60 படங்களில் நடித்தும் இந்த நிலைமையா?

Report Print Santhan in பொழுதுபோக்கு
0Shares
0Shares
lankasrimarket.com

பிரபல கன்னட நடிகரின் மகன் உபேர் கார் டிரைவராக வேலை செய்து வருவது தற்போது தெரியவந்துள்ளது.

கன்னட திரையுலகில் 370-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவர் கே.எஸ்.அஸ்வந்த், இவர் கடந்த 2010-ஆம் ஆண்டு ஜனவரி 18-ஆம் திகதி மரணமடைந்தார்.

இவருக்கு நாகரத்னா அஸ்வந்த், விஜய மூர்த்தி, சுப்பு கிருஷ்ணா அஷ்வந்த் மற்றும் சங்கர் அஸ்வந்த் என்ற நான்கு பிள்ளைகள் உள்ளனர்.

இவர்களில் சங்கர் அஸ்வந்த் தற்போது உபேர் கார் டிரைவராக வேலை செய்து வருகிறார். 1993-ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த அவர் அதன் பின் 60-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார், அதைத் தொடர்ந்து தொலைக்காட்சி நாடகங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் இது குறித்து அவர் கூறுகையில், தான் எதிர்பார்த்த அளவிற்கு திரையுலகம் கை கொடுக்கவில்லை என்றாலும் அதன் மீது கோவம் இல்லை.

நான் சொந்த காலில் நிற்க விரும்புகிறேன், என்னுடைய தந்தையின் கொள்கைகள் தான் எனக்கு தூண்டு கோலாக உள்ளது என்று கூறியுள்ளார்.

இன்னும் சில நாட்களில் அவரது தந்தையின் நினைவு நாள் வரவிருப்பதால், தன்னுடைய சொந்த செலவிலே அனைத்தையும் செய்யவிரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இவர் தன்னை யாரும் அடையாளம் கண்டுவிடக் கூடாது என்பதற்காக தொப்பி ஒன்றை அணிந்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்