பிரான்சில் இன்று முதல் அமுலுக்கு வரும் சாலை விதிகள்: ஓட்டுநர்களின் கவனத்திற்கு

Report Print Raju Raju in பிரான்ஸ்
0Shares
0Shares
lankasri.com
advertisement

பிரான்ஸில் சாலை போக்குவரத்து விடயத்தில் ஏற்கனவே பல்வேறு விதமான சட்டங்கள் அமுலில் உள்ளது.

இந்நிலையில் இன்று முதல் அமுலாக்கப்பட்டுள்ள சட்டங்கள் குறித்து Magazine L’Argusல் விரிவாக கூறப்பட்டுள்ளது.

advertisement

அதில், வாகனம் ஓட்டும் போது ஓட்டுநர் உணவு அருந்திக் கொண்டிருந்த நிலையில் பொலிசிடம் பிடிபட்டால் €75 அபராதமும், ஓட்டுனர் உரிமத்தில் மூன்று புள்ளிகளையும் இழக்க நேரிடும்.

இது, காரில் உள்ள Glove Box-யை பார்ப்பவர்களுக்கும், டிராபிக் சமயத்தில் அலங்காரம் செய்து கொள்கிறவர்களுக்கும் பொருந்தும்.

அதே போல வாகனத்தில் இருக்கும் போது டிவி, செல்போன் போன்ற விடயங்களை வாகனத்தை ஓட்டுபவர்கள் பார்த்தால் அவர்களுக்கு €1,500 அபராதமும், ஓட்டுநர் உரிமத்தில் மூன்று புள்ளிகளையும் இழக்க நேரிடும்.

மேலும், அதிக சத்ததுடன் காரில் பாடல்கள் மற்றும் இசை சம்மந்தான விடயங்களை கேட்பவர்களுக்கு €75 அபராதமும், காரில் குழந்தைகள் இருக்கும் போது ஓட்டுநர் புகைப்பிடித்தால் அவருக்கு €68 அபராதமும் விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

0.2g/லிட்டர் அளவுக்கு மேல் இளம் வயது ஓட்டுநர்களின் இரத்தத்தில் மது அளவு கலந்திருந்தால் அவர்களுக்கு €4,500 அபராதமும், ஓட்டுநர் உரிமத்தில் ஆறு புள்ளிகளும் பறிக்கப்படும்.

அதே போல, மாசு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஸ்டிக்கர்களை வெளியில் தெரியும் படி வாகனத்தில் ஒட்டாவிட்டால் அவர்களுக்கு €68 அபராதம் விதிக்கப்படும்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments