பிரான்சில் 221 கி.மீற்றர் வேகத்தில் சென்ற நபரின் வாகனத்தை பறிமுதல் செய்த பொலிஸ்: ஏன் தெரியுமா?

Report Print Santhan in பிரான்ஸ்
0Shares
0Shares
lankasrimarket.com

பிரான்சில் 90 கி.மீற்றர் வேகத்தில் செல்ல வேண்டிய சாலையில், 221 கி.மீற்றர் வேகத்தில் சென்றதால், பொலிசார் அந்த இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

பிரான்சின் Saulce-sur-Rhone இல் உள்ள RN7 சாலையில் நாற்பது வயது மதிக்கத்தக்க நபர் 90 கி.மீற்றர் வேகத்தில் செல்ல வேண்டியதற்கு பதிலாக, 221 கி.மீற்றர் வேகத்தில் சென்றுள்ளார்.

இது வேகக்கட்டுப்பாட்டுக் கருவியில் காட்டப்பட்டதால், பொலிசார் அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது அவர், தான் அவசரமாகச் செல்லவேண்டி உள்ளதாகவும், இல்லையென்றால் பிள்ளைகள் தனிமையில் இருப்பார்கள் என்று கூறியுள்ளார்.

இருப்பினும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதால், அவரின் லைசென்ஸ் ஆறு மாத மாத காலத்திற்கு தடை செய்யப்படும் என்று பொலிசார் கூறியுள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்