அகதிகள் முகாமில் 5 வயது சிறுவன் குத்தி கொலை: தாயார் முன்னிலையில் நிகழ்ந்த கொடூரம்

Report Print Peterson Peterson in ஜேர்மனி
0Shares
0Shares
lankasri.com
advertisement

ஜேர்மனி நாட்டில் உள்ள அகதிகள் முகாம் ஒன்றில் தாயார் முன்னிலையில் அவரது 5 வயது மகன் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பவேரியா மாகாணத்தில் உள்ள Arnschwang என்ற நகரில் அகதிகள் முகாம் ஒன்று அமைந்துள்ளது.

advertisement

இந்த முகாமில் ரஷ்ய நாட்டை சேர்ந்த தாயார் ஒருவர் தனது இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளார்.

இதே அகதிகள் முகாமில் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த 41 வயதான நபர் ஒருவரும் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று பிற்பகல் வேளையில் தாயார் குடியிருந்த அறைக்குள் கத்தியுடன் நுழைந்த ஆப்கான் அகதி 5 வயது சிறுவனை மடக்கி பிடித்துள்ளார்.

தாயாருக்கும், நபருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஆத்திரம் அடைந்த நபர் சிறுவனை சரமாரியாக குத்தியுள்ளார்.

மகனை காப்பாற்ற வந்த தாயாரையும் அந்நபர் தாக்கியுள்ளார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த பொலிசார் நபரை சுட்டுக் கொன்றுள்ளனர்.

நபர் நடத்திய தாக்குதலில் சிறுவன் பலியாகியுள்ளான். தாயாரையும் மற்றொரு பிள்ளையையும் பொலிசார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

தாக்குதல் குறித்து காரணம் தெரியாத நிலையில், வழக்கு பதிவு செய்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments