ஜேர்மனி சூப்பர் மார்க்கெட் தாக்குதல்தாரி குறித்த தகவல் வெளியானது

Report Print Basu in ஜேர்மனி
539Shares
539Shares
lankasrimarket.com

ஜேர்மனி சூப்பர் மார்க்கெட்டில் கத்தியுடன் நுழைந்து தாக்குதல் நடத்திய நபர் இஸ்லாமியர் என தெரியவந்துள்ளது.

ஹம்பெர்க் சூப்பர் மார்க்கெட்டில் கத்தியுடன் நுழைந்த மர்ம நபர், வாடிக்கையாளர்களை சரமாரியாக கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார், 6 பேர் காயமடைந்தனர். இதனையடுத்து சம்பவயிடத்திலிருந்த நபர் ஒருவர் கொடுத்த தகவலின் படி பொலிசார் குற்றவாளியை கைது செய்தனர்.

தாக்குதல் ஈடுபட்ட நபர் புகலிடம் மறுக்கப்பட்டவர், அவர் ஐக்கிய அரபு எமிரேட்டில் பிறந்தவர் என தெரியவந்துள்ளது.

26 வயதான அவர் இஸ்லாமியர், ஆனால் தீவிரவாதி இல்லை, உளவியல் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர் எனவும் பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

தாக்குதல்தாரியை பிடிக்க உதவிய நபர்களை பாராட்டிய பொலிசார், தற்போதுவரை தாக்குதலுக்கான நோக்கம் குறித்த தகவலை வெளியிடவில்லை.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்