விமான நிலையத்தில் புதிதாக பணியில் சேர்ந்த காவலர்: நிகழ்ந்த விபரீத சம்பவம்

Report Print Peterson Peterson in ஜேர்மனி
0Shares
0Shares
lankasrimarket.com

ஜேர்மனி நாட்டில் உள்ள விமான நிலையத்தில் புதிதாக பணியில் சேர்ந்த காவலர் ஒருவர் தவறுதலாக தன்னுடைய துப்பாக்கியை சுட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜேர்மன் தலைநகரான பெர்லினில் உள்ள Tegel விமான நிலையத்தில் இருந்து Eurowings என்ற விமானம் புறப்பட தயாராக இருந்துள்ளது.

ஜேர்மனியில் உள்ள Cologne விமான நிலையத்திற்கு இன்று காலை புறப்பட இருந்தபோது அந்த அசம்பாவித சம்பவம் நிகழ்ந்துள்ளது.

விமான நிலையத்தில் புதிதாக பணியில் சேர்ந்த காவலர் ஒருவர் விமானத்தில் பயணம் செய்ய இருந்த தூதரக அதிகாரிக்கு ஒருவருக்கு பாதுகாப்பு கொடுக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளார்.

அப்போது, எதிர்பாராதவிதமாக அவரது கையில் இருந்து துப்பாக்கி வெடித்துள்ளது.

அதிர்ஷ்டவசமாக ஆட்கள் இல்லாத இடம் நோக்கி குண்டு பாய்ந்ததால் யாருக்கும் ஆபத்தும் எதுவும் ஏற்படவில்லை.

இச்சம்பவத்தை தொடர்ந்து புறப்பட தயாராக இருந்த விமானம் மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

பயணிகள் மீண்டும் சோதிக்கப்பட்டு விமானத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். காலை 8.10 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் தாமதமாக 9.45 மணிக்கு புறப்பட்டுள்ளது.

பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்தபோது பாதுகாவலரின் துப்பாக்கி வெடித்தது தொடர்பாக விமான நிலைய காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்