158 மில்லியன் டொலர் அபராதம்: பிரபல கார் நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவு

Report Print Peterson Peterson in ஜேர்மனி
0Shares
0Shares
lankasrimarket.com

சுவிட்சர்லாந்து நாட்டு சட்டவிதிகளை மீறிய குற்றத்திற்காக BMW கார் நிறுவனம் 158 மில்லியன் டொலரை அபராதமாக செலுத்த வேண்டும் என அந்நாட்டு நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

ஜேர்மன் நாட்டை சேர்ந்த BMW கார் நிறுவனம் சர்வதேச அளவில் தனது கார்களை விற்பனை செய்து வருகிறது.

ஆனால், அதே சமயம் சில கடுமையான சட்டவிதிகளையும் பின்பற்றி வருகிறது.

குறிப்பாக, ஐரோப்பாவில் European Economic Area (EEA)-ல் உறுப்பினராக உள்ள நாடுகளுக்கு மட்டுமே தனது நிறுவனத்தின் கார்களை விற்பனை செய்து வந்துள்ளது.

இதில் அங்கம் வகிக்காத சுவிட்சர்லாந்து நாட்டு குடிமக்கள் BMW கார்களை வாங்க முடியாமல் போராடியுள்ளனர்.

இந்நிலையை கண்டித்து சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த COMCO என்ற அமைப்பு கார் நிறுவனத்தின் மீது 5 ஆண்டுகளுக்கு முன்னர் வழக்கு பதிவு செய்தது.

இவ்வழக்கின் இறுதி வாதத்தின்போது சுவிட்சர்லாந்து சட்ட விதிகளை மீறிய குற்றத்திற்காக BMW கார் நிறுவனம் 158 மில்லியன் டொலரை அபராதமாக செலுத்த வேண்டும் என உத்தரவிட்டது.

நீதிமன்றத்தின் இத்தீர்ப்பை எதிர்த்து கார் நிறுவனம் மேல்முறையீடு செய்தது.

ஆனால், கடந்த வெள்ளிக்கிழமை இம்மேல்முறையீடு தொடர்பான மனுவை நிராகரித்த சுவிஸ் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்ட அபராதத்தை அவசியம் செலுத்த வேண்டும் என மீண்டும் உத்தரவிட்டுள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்