நகங்களை பொதியில் நிரப்பி மிரட்டல் விடுத்தல் மர்ம நபர்கள்

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி
61Shares
61Shares
lankasrimarket.com

ஜேர்மனியில் உள்ள சந்தைக்கு அருகில் சந்தேகத்திற்கு இடமான அடிப்படையில் பொதி ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

அது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு மக்கள் கூடும் இடங்களில் தாக்குதல் நடத்தப்படும் என ஏற்கனவே ஐஸ் தீவிரவாதிகள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் அவர்களை மிரட்டுவதற்காக வைக்கப்பட்ட போலியான பொதி என தெரியவந்துள்ளது.

மர்மநபர்கள் சிலர், நகங்கள் மற்றும் வெடிக்கும் சாதனங்களை ஒரு பொதிக்குள் அடைத்து அதனை Potsdam நகரில் உள்ள கிறிஸ்துமஸ் சந்தைக்கு அருகில் வைத்துள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தியதில், அது மீண்டும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை என தெரியவந்துள்ளது.

Brandenburg மாநில உள்துறை மந்திரி கார்ல்-ஹென்ஸ் ஷ்ரோடர் கூறியதாவது, இந்த பொதியானது கிறிஸ்துமஸ் சந்தைக்கு இலக்காகாது என்றும், DHL விநியோக சேவையை இலக்காகக் கொண்ட ஒரு மிரட்டல் முயற்சியாகும் என்று தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு, துனிசியா இஸ்லாமியவாதி ஒருவர் பெர்லினில் கிறிஸ்துமஸ் சந்தையில் லாரி மோதி தாக்குதல் நடத்தியதில், கிட்டத்தட்ட 11 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்