சிகிச்சைக்காக சென்னை வந்த ஜேர்மன் இளைஞர் மீது தாக்குதல்

Report Print Kavitha in ஜேர்மனி
255Shares
255Shares
lankasrimarket.com

சென்னைக்கு சிகிச்சைக்காக வந்த ஜேர்மனி இளைஞர் ஒருவர் இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜேர்மனியைச் சேர்ந்த தி ஹா என்பவர், மூக்கு அறுவை சிகிச்சைக்காக சென்னை வந்துள்ளார்.

இந்நிலையில் தி ஹா திருவல்லிக்கேணியில் விடுதி ஒன்றில் தங்கியிருந்து இன்று காலை கடற்கரைக்கு சென்றுள்ளார்.

அப்போது, அடையாளம் தெரியாத 3 பேர், அவரது செல்போனைப் பறிக்க முயன்றுள்ளனர். எனினும், செல்போனை தி ஹா கெட்டியாக பிடித்துக் கொண்டார்.

அப்பொழுது செய்யவதறியது அந்த நபர்கள் தி ஹாவை உருட்டுக்கட்டையால் தாக்கிவிட்டு மூவரும் தப்பியோடி உள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து அண்ணா சதுக்கம் பொலிசார் வழக்குப் பதிவு செய்து மூவரையும் தேடி வருகின்றனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்