கூரையை பிய்த்துக்கொண்டு கொட்டிய பணமழை

Report Print Deepthi Deepthi in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com

மதுரை மாவட்டத்தில் கூரையை பிய்த்துக்கொண்டு பணம் கொட்டியதால் தம்பதியினர் அதிர்ச்சி அடைந்தனர்.

சிம்மக்கல் பகுதியை சேர்ந்த ரவி என்பவர் 50 லட்சம் ரொக்கத்தை எடுத்துக்கொண்டு பாலத்தில் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தார்.

அப்போது எதிரே வந்த பேருந்தின் மீது மோதியதில் ரவியின் இருசக்கர வாகனம் தூக்கிவீசப்பட்டதில் அருகில் உள்ள பள்ளத்தில் ரவி விழுந்துள்ளார்.

அவரது இருச்சகர வாகனம் மற்றும் அவரது கையில் இருந்து 50 லட்சம் ரூபாய் அருகில் இருந்த வீட்டின் கூரையை பிய்த்துக்கொண்டு வீட்டுக்குள் கொட்டியது.

வீட்டுக்குள் தூங்கிகொண்டிருந்த தம்பதியினர் மீது 50 லட்சம் ரூபாய் நோட்டுகள் சிதறி விழுந்ததால் அவர்கள் அதிச்சியடைந்துள்ளனர்.

அதன்பின்னர் வெளியில் வந்து பார்த்த பின்னர் தான், நடந்தவை அனைத்தும் தெரியவந்தது.

அதனைத்தொடர்ந்து ரவியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர், மேலும் பணத்தினையும் பத்திரமாக ரவியிடம் ஒப்படைத்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments