பாலம் உடைந்து விபத்து: 30க்கும் மேற்பட்டோர் மாயம்

Report Print Arbin Arbin in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com
advertisement

இந்தியாவில் கோவா மாநிலம் சர்சோரெம் பகுதியில் நடைபாதை ஆற்றுப்பாலம் உடைந்து விபத்துக்குள்ளானதில், 50 பேர் நீரில் சிக்கி கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவா மாநிலம் தெற்கு பகுதியில் சர்சோரெம் பகுதியில் நடைபாதை ஆற்றுப் பாலம் ஒன்று திடீரென விபத்துக்குள்ளானது. அப்போது பாலத்தில் இருந்த 50-க்கும் அதிகமானோர் ஆற்றில் விழுந்தனர். இதில் 30க்கும் மேற்பட்டோர் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது.

advertisement

விபத்துக்குள்ளான பாலம் போர்த்துகீசியர் காலத்தில் கட்டப்பட்டதாகும். இந்த பாலம் சன்வோர்தெம் ஆற்றின் குறுக்கே உள்ளது.

இந்த சம்பவம் குறித்து பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், வாலிபர் ஒருவர் ஆற்றில் குறித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை காப்பாற்ற மீட்புப் படை குழுவினர் முயன்று வந்தனர்.

இந்த மீட்பு நடவடிக்கையை காண திரளான மக்கள் அங்கு கூடினார். இதனால் பாலம் திடீரென இடிந்து விழுந்தது என்றார்.

பாலம் உடைந்து விபத்துக்குள்ளானதை அடுத்து ஆற்றில் குதித்ததில் சிலர் தாங்களாகவே நீந்தி கரை வந்து தங்களது உயிரினை காப்பாற்றிக் கொண்டனர்.

மேலும் ஆற்றில் சிக்கிக் கொண்டிருப்பவர்களை காப்பாற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments