ப்ளூவேல் கேம்க்கு அடிமையாகி உயிரை மாய்த்து கொண்ட 10 வயது சிறுவன்

Report Print Basu in இந்தியா
251Shares
251Shares
lankasrimarket.com

இந்தியாவில் 10 வயது சிறுவன் ப்ளூவேல் கேமுக்கு அடிமையாகி தூக்குபோட்டு உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்குவங்க மாநிலத்தின் மித்னாபூர் பகுதியைச் சேர்ந்த அங்கன் தே என்ற 10 ஆம் வகுப்பு மாணவனே இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

ப்ளூவேல் கேம்க்கு அடிமையாக இருந்த அங்கன் தே, சம்பவத்தன்று பள்ளியிலிருந்து வீட்டிற்கு வந்தவும் கணனியின் முன்பாக சிறிது நேரம் அமர்ந்துள்ளார்.

பின்னர் குளிக்க சென்றுவிட்டு சாப்பிட வருவதாக கூறிய மாணவன், நீண்ட நேரம் ஆகியும் கதவை திறக்காததால் சந்தேகமடைந்த அவனது பெற்றோர் குளியலறையின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

மாணவர் பிளாஸ்டிக் கவர்களால் நைலான் கயிறுபோல் செய்து, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

மாணவன் தற்கொலை குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ரஷ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ப்ளூவேல் கேம்க்கு அடிமையாகி இதுவரை சுமார் 150 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விளையாட்டால் தற்போது இந்தியாவிலும் தற்கொலை சம்பவங்கள் அரங்கேறி வருவது பயத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்