சிறுமியை கற்பழித்து கொன்ற கொலையாளி பிடிபட்டது எப்படி: வெளியான பகீர் தகவல்

Report Print Arbin Arbin in இந்தியா
1363Shares
1363Shares
lankasrimarket.com

சென்னையில் ஹாசினி என்ற 7 வயது சிறுமியை கொலை செய்த வழக்கில் பிணையில் வெளிவந்துள்ள குற்றவாளி தஷ்வந்த் தமது சொந்த தாயாரை கொலை செய்துவிட்டு தப்பிய நிலையில் மராட்டிய மாநிலம் மும்பையில் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் தலைமறைவாக இருந்த அவர் பொலிசாரிடம் சிக்கியது எப்படி என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சொந்த தாயாரை கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த தஷ்வந்த் மும்பையில் மறைந்திருப்பதாக பொலிசாருக்கு தகவல் கிட்டியுள்ளது.

இதனையடுத்து சென்னை குன்றத்தூர் காவல்துறை ஆய்வாளர் சார்லஸ் தலைமையிலான குழு மும்பை விரைந்தது. ஏற்கெனவே ஹாசினி விவகாரத்தில் தஷ்வந்தை குன்றத்தூர் பொலிசார் விசாரித்து இருந்ததால் அவனது சில பழக்கவழக்கங்களை பொலிசார் நன்கு தெரிந்து வைத்திருந்துள்ளனர்.

அந்த பழக்கத்தின் அடிப்படையில் அவன் மும்பையில் எங்கெல்லாம் செல்ல வாய்ப்பிருக்கிறது என்று ஊகித்து அந்த இடங்களில் தேடியுள்ளனர்.

இதையடுத்து மத்திய மும்பையில் உள்ள தார்டியோ என்னும் இடத்தில் தஷ்வந்தை பொலிசார் பிடித்துள்ளனர்.

இருப்பினும் தஷ்வந்தின் அந்த மர்மமான பழக்கவழக்கம் தொடர்பில் வெளியிட விசாரணை அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்