ஊடகங்களில் வெளியான 2017-ம் ஆண்டின் சிறந்த புகைப்படம் இது தான்

Report Print Peterson Peterson in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
lankasrimarket.com

2017-ம் ஆண்டில் சர்வதேச ஊடகங்களில் வெளியான புகைப்படங்களில் சிறந்த புகைப்படமாக துருக்கி நாட்டில் வெளியான புகைப்படத்திற்கு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் ஊடகங்களில் வெளியாகும் அல்லது ஊடகத்துறையில் பணியாற்றும் பத்திரிகையாளரால் எடுக்கப்படும் சிறந்த புகைப்படத்திற்கு World Press Photo விருது வழங்கி கெளரவிக்கப்பட்டு வருகிறது.

இந்த வரிசையில் 2017-ம் ஆண்டின் சிறந்த ஊடகத்துறையின் புகைப்படமாக துருக்கி நாட்டை சேர்ந்த ஊடகத்துறையை சேர்ந்த புகைப்படக்காரர் எடுத்த புகைப்படம் இந்த விருதை பெற்றுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் துருக்கியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ரஷ்யாவை சேர்ந்த தூதரக அதிகாரியான Andrei Karlov என்பவர் பங்கேற்றுள்ளார்.

அப்போது, துருக்கி நாட்டை சேர்ந்த விடுப்பில் இருந்த பொலிஸ் அதிகாரியான Mevlut Mert Altintas என்பவர் தூதரக அதிகாரியை கொடூரமாக துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார்.

இச்சம்பவத்திற்கு பிறகு துப்பாக்கியை ஏந்தியவாறு கையை உயர்த்தி கொலையாளி ரஷ்யாவிற்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசியுள்ளார். பொலிஸ் அதிகாரி பேசியபோது அருகில் தூதரக அதிகாரி சடலமாக கிடந்துள்ளார்.

இக்காட்சியை Burhan Ozbilici என்பவர் தத்ரூபமாக புகைப்படம் பிடித்து செய்திதாள்களில் வெளியிட்டுள்ளார்.

சர்வதேசளவில் இப்புகைப்படம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில், இப்புகைப்படம் தற்போது World Press Photo-2017 விருதை வென்றுள்ளது.

மேலும், விருது வழங்கும் நிகழ்ச்சியில் உலக ஊடகங்களால் எடுக்கப்பட்ட சுமார் 80 ஆயிரம் புகைப்படங்கள் இடம்பெற்றுருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments