வடகொரியா குறிவைக்கும் குவாம் தீவின் முக்கியத்துவம் தெரியுமா?

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
lankasrimarket.com

அமெரிக்காவை எச்சரிக்கும் வகையில் அதன் ஆளுமையின் கீழ் உள்ள குவாம் தீவின் மீது வடகொரியா ராக்கெட் தாக்குதலை நடத்த முடிவு செய்துள்ளது.

மேற்கு பசிபிக் பெருங்கடலில் 544 சதுர கிமீ பரப்பளவில் அமைந்துள்ள குவாம் அமெரிக்காவின் ஆளுகையில் உள்ள ஒரு தீவாகும்.

கொரிய தீபகற்பம் மற்றும் தென் சீனக் கடல் பகுதிகளுக்கு இடையில் அமைந்துள்ளதால் குவாம் தீவை ராணுவ தளமாக அமெரிக்கா பயன்படுத்தி வருகிறது.

குவாம் முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு தீவு ஆகும். இங்கிருந்து பிலிப்பைன்ஸ் 2,500 கிமீ தொலைவிலும், ஜப்பான் 2,600 கிமீ தொலைவிலும், வட கொரியா 3,380 கிமீ தொலைவிலும் உள்ளது.

குவாம் தீவில் 1,62,000 பேர் வசிக்கின்றனர், இதில் 40% சமாரோ இனத்தவரும், 25% பிலிப்பைன் நாட்டைச்சேர்ந்தவர்களும் பெரும்பான்மையானவர்களாக உள்ளனர்.

இங்கு அமெரிக்க படைத்துருப்பைச் சேர்ந்த 6,000 வீரர்கள் உள்ளனர். 1521-ல் இத்தீவை முதல் முதலாக போர்த்துகலைசேர்ந்த மெக்கலன் என்பவர் கண்டறிந்தவர். பின்னர் இத்தீவு 1526ல் ஸ்பானிய மாலுமிகலால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது.

1898-ல் நடைபெற்ற ஸ்பானிஷ்- அமெரிக்க போருக்கு பின்னர் இத்தீவு அமெரிக்காவின் ஆளுகைக்கு கீழ் வந்தது.

இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இத்தீவு 1944ல் தன்னாட்சி பெற்றது.

அமெரிக்க ராணுவ வீரர்கள் மூலமே இத்தீவின் பொருளாதாரம் நடைபெற்று வந்தாலும், சுற்றுலாவும் இதன் பொருளாதாரத்தில் முக்கியப் பங்காற்றி வருகிறது.

தற்போது ஏவுகனைகள் மூலமாக இத்தீவை தாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக வடகொரியா அறிவித்ததற்கு பின்னர் இத்தீவுவாசிகளிடம் அச்சமும், பதற்றமும் காணப்படுகிறது.

இருப்பினும் அமெரிக்க வீரர்கள் இருப்பதால் இவர்கள் ஆறுதல் அடைந்துள்ளனர்.

முன்னதாக வியட்நாம் போரின் போது ஹனோய் தீவுகள் மீது குண்டு மழை பொழிந்த பி-52 போர் விமானங்கள் இங்கிருந்து தான் இயக்கப்பட்டன.

குவாம் தீவில் இருக்கக்கூடிய அமெரிக்காவின் ராணுவ வலிமையும், வடகொரியாவில் இருந்து அருகாமையில் இருப்பதுமே இத்தீவை வடகொரியா குறிவைக்க முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்