நோயாளியின் முன்பு நிலை குலைந்து உயிர் விட்ட மருத்துவர்: அதிர வைக்கும் காரணம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
lankasrimarket.com

சீனாவில் மருத்துவமனை ஒன்றில் நீண்ட 18 மணி நேர பணிக்கு பின்னர் தமது நோயாளியின் முன்பு நிலை குலைந்து மருத்துவர் ஒருவர் உயிர் விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் ஷான்ஷி மாகாணத்தில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றில் பணிபுரிந்துவரும் 43 வயதான மருத்துவர் Zhao Bianxiang என்பவரே கடந்த 29 ஆம் திகதி மரணமடைந்தவர்.

சுவாசம் தொடர்பான சிறப்பு மருத்துவரான இவர் தொடர்ந்து 20 மணி நேரம் மருத்துவமனையில் பணிபுரிந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் மூளையில் கடுமையாக பாதிக்கப்பட்ட மருத்துவர் Zhao Bianxiang ஒருகட்டத்தில் நிலைகுலைந்து பணியில் இருக்கும்போதே மரணமடைந்துள்ளார்.

மாலை 6 மணி அளவில் பணியை துவங்கிய மருத்துவர் Zhao Bianxiang தொடர்ந்து நோயாளிகளை சந்தித்து தேவையான மருத்துவ உதவிகளை அளித்து வந்துள்ளார்.

கடும் உழைப்பாளியான மருத்துவர் Zhao Bianxiang குறித்த மருத்துவமனையில் உள்ள நோயாளிகளால் மிகவும் பெருமையாக பேசப்பட்டவராவார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்