இந்த வருடத்திற்கான சிறந்த புகைபடத்திற்கான விருது: வென்ற புகைப்படம் இது தான்!

Report Print Athavan in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
lankasri.com

ஒவ்வொரு வருடமும் பத்திரிக்கையாளர்கள் எடுத்த சிறந்த புகைப்பட விருது வழங்கப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் வெனிசுலா புகைப்படக் கலைஞரான ரோனால்ட் ஸ்கெமிட் எடுத்த புகைப்படம் இந்த வருடத்தின் சிறந்த புகைப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

வெனிசுலா நாட்டில் அதிபர் நிக்கோலஸ் மதுரோவுக்கு எதிராக 2017ம் ஆண்டு பெரும் கலவர்ம் வெடித்தது. அதிபருக்கு எதிரான அந்த கலவரத்தை அடக்க பொலிஸ் தடியடி நடத்தியது.

அப்போது ஜோஸ் விக்டர் சலாஸர் பல்ஸா எனும் 28 வயது இளைஞர் போராட்டத்தில் தன் மீது தீ வைத்துக்கொண்டார். அவர் அதிலிருந்து மீள முடியாமல் சாலையில் ஓடினார்.

அந்த காட்சியை தான் வெனிசுலா புகைப்படக் கலைஞரான ரோனால்ட் ஸ்கெமிட் படம் பிடித்தார். அதிபருக்கு எதிரான பொதுமக்களின் போராட்டம் வெற்றி பெற இந்த புகைப்படமும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.

நெருப்பின் வீரியத்தையும் போராட்டத்தின் ஆழத்தையும் படம்பிடித்த அந்தப் புகைப்படக் கலைஞருக்கு தான் 2018-ம் ஆண்டுக்கான உலக பத்திரிகை புகைப்பட விருது கிடைத்துள்ளது. ஆனால், இந்தப் புகைப்படம் நிச்சயம் இதயம் பலவீணமானவர்கள் பார்க்கத்தகாதவைதான்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்