பலகோடி ரூபாய் பெறுமான குளிர்பான விளம்பர ஒப்பந்தத்தை மறுத்த விராட் கோஹ்லி

Report Print Arbin Arbin in ஏனைய விளையாட்டுக்கள்
0Shares
0Shares
lankasrimarket.com

காற்றடைக்கப்பட்ட எந்த ஒரு குளிர்பானத்தையும் தான் அருந்துவதில்லை என்ற காரணத்தினால் பலகோடி ரூபாய் பெறுமான குளிர்பான விளம்பர ஒப்பந்தத்தை விராட் கோஹ்லி வேண்டாம் என்று மறுத்துள்ளார்.

தான் எதை மற்றவர்களுக்குக் கூறுகிறோமோ அதை நாம் முதலில் கடைபிடிக்க வேண்டும் என்ற கொள்கையில் விராட் கோஹ்லி உறுதியாக இருப்பது பலரது பாராட்டுதலையும் பெற்றுத்தந்துள்ளது.

அவரே ஒருமுறை நிருபர் ஒருவரிடம் கூறும்போது, தன்னால் செய்ய முடியாத ஒன்றை அணி வீரர்களிடம் வலியுறுத்த மாட்டேன் என்றார்.

முதலில் ஒன்றை நான் செய்ய முடியும் என்பதை உறுதிப் படுத்திக் கொண்ட பிறகே சகவீரர்களை அதைச் செய்யுமாறு கூறுவேன் என்று கூறியிருந்தார் விராட் கோஹ்லி.

சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பாக தேசிய பாட்மிண்டன் பயிற்சியாளர் பி.கோபிசந்த் இதே போன்ற ஒரு கொள்கையின் அடிப்படையில் மிகப்பெரிய தொகைக்கான விளம்பர ஒப்பந்தத்தைத் துறந்தார்.

தான் குளிர்பானம் எதையும் அருந்துவதில்லை என்பதால் அடுத்தவர் பயன்படுத்த பெரிய தொகையைப் பெற்றுக் கொண்டு விளம்பரம் செய்வது நியாயமல்ல என்று கோபிசந்த் கருதி குறித்த ஒப்பந்தத்தை மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்