ஒரு நிமிடத்தில் காயங்களை ஆறச்செய்யும் பசை கண்டுபிடிப்பு

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
0Shares
0Shares
Seylon Bank Promotion
advertisement

சத்திரசிகிச்சைகளின்போது ஏற்படும் காயங்கள் மற்றும் ஏனைய தோல் கிழிவு போன்றவற்றை 60 செக்கன்களில் ஆறச்செய்வதற்கான பசை ஒன்றினை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

இது தோல்களில் ஏற்படும் காயங்களை மட்டுமன்றி உடலினுள் காணப்படும் அங்கங்களில் ஏற்படக்கூடிய காயங்களிற்கும் பயன்படுத்த முடியும்.

advertisement

MeTro எனப்படும் இப் பசையினை பொஸ்டனில் உள்ள Northeastern பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு ஒன்றே உருவாக்கியுள்ளது.


எனினும் இதனை உடனடி தீர்வாகவே பயன்படுத்த முடிவதுடன் பாரிய காயங்களுக்கு பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இதுவரை மனிதனில் இப் பசை பரிசீலிக்கப்படவில்லை.

பன்றிகளின் நுரையீரல்களில் மட்டுமே வெற்றிகரமாக பரிசீலிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்