கைப்பேசிகளின் அளவினை மேலும் குறைக்க வருகிறது புதிய சிம் கார்ட் தொழில்நுட்பம்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
0Shares
0Shares
lankasrimarket.com

ஸ்மார்ட் கைப்பேசிகளின் வருகையின் பின்னர் சிம் கார்ட்டின் அளவு சிறுத்துக்கொண்டே செல்கின்றது.

சாதாரண அளவில் இருந்து மைக்ரோ சிம், நனோ சிம் என இரண்டு தலைமுறை சிம்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

எனினும் ஸ்மார்ட் கைப்பேசிகளின் தடிப்பை மேலும் குறைப்பதற்காக புதிய சிம் தொழில்நுட்பம் ஒன்றினை அறிமுகம் செய்ய ARM நிறுவனம் முயற்சித்து வருகின்றது.

இதன்படி எதிர்காலத்தில் Processor துணைச் சாதனத்தினுள்ளேயே சிம் கார்ட் பொருத்தப்படக்கூடிய வசதி தரப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

இவ் வகை சிம் கார்ட்கள் iSIM என அழைக்கப்படும் என ARM நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் eSIM எனப்படும் 6 x 5mm அளவுடைய சிறிய சிம் கார்ட்டினை உருவாக்கும் முயற்சியில் கைப்பேசி வடிவமைப்பாளர்கள் இறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்