நிலவின் மேற்பரப்பில் பறந்த மர்மப் பொருள்கள்: வைரல் வீடியோ

Report Print Kabilan in விஞ்ஞானம்
0Shares
0Shares
lankasrimarket.com

நிலவின் மேற்பரப்பில் தட்டுகள் போன்ற மூன்று மர்மப் பொருள்கள் பறக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

தன்னார்வ வானியல் ஆராய்ச்சியாளர் ஒருவர், நிலவினை படம் பிடித்தபோது பூமிக்கும், நிலவிற்கு இடையே மூன்று தட்டு போன்ற பொருட்கள் பறக்கும் வீடியோ பதிவாகியுள்ளது.

மேகங்கள் அற்ற இரவு வேளையில் இந்த வீடியோ எடுக்கப்பட்டதால், மிகவும் தெளிவாக அந்த பொருட்கள் பறப்பது தெரிகிறது.

ஆனால், அவை என்னவென்பது உறுதியாக தெரியவில்லை. அந்த பொருட்களில் இரண்டு பொருட்கள் ஒன்றாக சேர்ந்து பறக்கின்றன. மற்றொரு பொருள் சற்று இடைவெளி விட்டு பறக்கிறது.

யூடியூப்பில் வெளியான இந்த வீடியோவை, ஒரு சிலர் கோள் ஒன்றின் நிழல் என்றும், மற்றொன்று சூரியனின் நிழல் என்றும், மூன்றாவது பொருள் பூமி அல்லது நிலவின் பிரதிபலிப்பு என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும், சிலர் செயற்கைகோளின் நிழல்கள் என்றும் கூறி வருகின்றனர்.

UFO

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்