ஆயுதங்கள் ஏற்றுமதியில் உச்சம் தொட்ட சுவிஸ்

Report Print Raju Raju in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
Cineulagam.com

சுவிட்சர்லாந்து கடந்தாண்டு ஏற்றுமதி செய்த போர் ஆயுதங்கள் மதிப்பு அதற்கு முந்தைய ஆண்டை விட அதிகம் என தெரியவந்துள்ளது.

இதுகுறித்த அறிக்கையை நாட்டின் பொருளாதார விவகாரங்களுக்கான அரசு செயலகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, கடந்தாண்டு $477 மில்லியன் மதிப்பிலான போர் ஆயுதங்களை 64 நாடுகளுக்கு சுவிஸ் ஏற்றுமதி செய்துள்ளது.

இது 2016-ஆம் ஆண்டை விட 8 சதவீதம் அதிகமாகும், மொத்த ஏற்றுமதி பொருட்களில் சரிவு ஏற்பட்ட போதும் ஆயுதங்கள் ஏற்றுமதி மட்டும் ஏறுமுகத்தில் உள்ளது தெரியவந்துள்ளது.

சுவிட்சர்லாந்திலிருந்து மொத்தம் ஏற்றுமதி ஆகும் பொருட்களில் 0.15 சதவீதம் போர் சம்மந்தமான உபகரணங்கள் என்பது முக்கிய விடயமாகும்.

இதில் பாதி அளவு ஐரோப்பியாவுக்கு, மீதி ஆசியா, ஆப்பிரிக்கா ஆகியவைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

நாடுகளின் அடிப்படையில் பார்த்தால் கடந்தாண்டு ஜேர்மனிக்கு அதிகளவில் போர் உபகரணங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

இந்த பட்டியலில் தாய்லாந்து இரண்டாமிடத்திலும், பிரேசில் மூன்றாமிடத்திலும், தென் ஆப்பிரிக்கா நான்காவது இடத்திலும், அமெரிக்கா ஐந்தாவது இடத்திலும் உள்ளன.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்