சுவிஸ் உள்ளாட்சி தேர்தலில் ஈழத்தமிழர் ஒருவர் அமோக வெற்றி

Report Print Dias Dias in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
lankasrimarket.com

சுவிட்ஸர்லாந்து - சூரிச் மாகாணத்தின் அடல்விஸ் நகரசபைத் தேர்தலில் ஈழத் தமிழரான கண்ணதாசன் முத்துத்தம்பி அமோக வெற்றியை பதிவு செய்துள்ளார்.

கடந்த 15ம் திகதி இடம்பெற்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்ற அவர், இரண்டாவது முறையாகவும் நகர சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

36 ஆசனங்களை கொண்ட குறித்த நகரசபைக்கு 140க்கும் மேற்பட்டவர்கள் போட்டியிட்டனர். இதில் கண்ணதாசன் முத்துத்தம்பி சோசலிசக் கட்சி சார்பில் போட்டியிட்டிருந்தார்.

சோசலிசக் கட்சி சார்பில் குறித்த நகர சபைக்கு 21 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் கண்ணதாசன் முத்துத்தம்பி ஐந்தாம் இடத்தினை பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்