சுவிட்சர்லாந்தில் அகதி இளைஞரை நாட்டைவிட்டு வெளியேற்ற முடிவு

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து
525Shares
525Shares
lankasrimarket.com

சுவிட்சர்லாந்தில் பாலியல் பலாத்கார வழக்கில் தண்டிக்கப்பட்ட அகதி இளைஞரை நாட்டைவிட்டு வெளியேற்ற நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சுவிட்சர்லாந்தில் Langnau ZH ரயில் நிலையத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 21 வயது மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

இந்த விவகாரத்தில் 25 வயது ஆப்பிரிக்க அகதி ஒருவரை பொலிசார் கைது செய்தனர். ஆனால் தாம் இந்த குற்றத்தில் ஈடுபடவில்லை என இறுதிவரை அந்த இளைஞர் போராடி வந்துள்ளார்.

இருப்பினும் சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்கள் என அனைத்தும் அவருக்கு எதிராக இருந்தலால் Horgen மாவட்ட நீதிமன்றம் குறித்த இளைஞருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் 9 ஆண்டுகளுக்கு சுவிட்சர்லாந்தில் நுழைய தடையும் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

சம்பவத்தன்று பாதிக்கப்பட்ட இளம்பெண் பயணம் மேற்கொண்ட அதே ரயிலில் குறித்த அகதி இளைஞரும் பயணம் செய்துள்ளார்.

ரயிலில் வேறு எந்த பயணிகளும் இல்லாத நிலையில் இருவரும் நட்பு ரீதியில் பேசிப்பழகியுள்ளனர்.

இந்த நிலையில் கிரீஸ் நாட்டவரான அந்த இளம்பெண் குறித்த இளைஞரிடம் போதை மருந்து கேட்டுள்ளதாகவும், அதற்கு கைமாறாக தம்முடன் பாலியல் உறவு வைத்துக் கொள்ளலாம் எனவும் தெரிவித்ததாக இளைஞரின் தந்தை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ஆனால் கண்காணிப்பு கமராவில், இருவரும் இருவேறு இருக்கைகளில் இருந்து பயணம் செய்துள்ளனர்.

பின்னர் அடுத்த சில நிமிடங்களில் இருவரும் அடுத்தடுத்த இருக்கைகளில் அமர்ந்து பயணம் செய்துள்ளனர்.

டிஎன்ஏ சோதனையிலும் பாலியல் உறவு நடந்தது உறுதி செய்யப்பட்டது. மட்டுமின்றி பாதிக்கப்பட்ட மாணவி மதுபோதையில் இருந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்