பிரித்தானிய மகாராணி பதவி விலகுகிறார்?

Report Print Arbin Arbin in பிரித்தானியா
448Shares
448Shares
lankasrimarket.com

வயது மூப்பு காரணமாக பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் பதவி விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரித்தானிய மகாராணி பதவி விலகுவதால் இளவரசர் சார்லஸ் ஆட்சிப் பொறுப்புக்கு வருவார் என கூறப்படுகிறது.

ஆனால் தற்போது 91 வயதாகும் எலிசபெத் மகாராணி உடல் நலம் காரணமாக பிரதிநிதி ஆட்சி சட்டத்தை அமுல்படுத்த கோரலாம் எனவும் அரண்மனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனால் இளவரசர் சார்லஸ் ஆட்சி பொறுப்புக்கு வரலாம் எனவும் ஆனால் பெயரளவுக்கு மட்டுமே மன்னராக இருக்க முடியும் எனவும் கூறப்படுகிறது.

இருப்பினும், மகாராணி எலிசபெத் தாம் மொத்த பொறுப்பில் இருந்தும் விடுவித்துக் கொள்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தால் இளவரசர் சார்லஸ் பிரித்தானியாவின் அடுத்த மன்னராக அதிகாரப்பூர்வமாக பதவியேற்க முடியும்.

அரண்மனை வட்டார தகவலின்படி, பதவி கைமாறுவதற்காக அனைத்து நடவடிக்கைகளும் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. கூடிய விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது.

இதனிடையே அரண்மனையின் முன்னாள் அதிகாரி ஒருவர், தற்போது மாகாராணியார் நல்ல உடல் நலத்துடனும், தமது வயது குறித்த புரிதலுடனும் அரசு மற்றும் அரசியல் சார்ந்த தெளிவான பார்வையுடனும் உள்ளார். ஆனால் காலம் முடிவு செய்தால் பதவி மாற்றம் கட்டாயம் நடக்கும் என்றார்.

மேலும் மகாராணியார் தமது 95 ஆம் வயது வரை உடல் நலத்துடன் இருப்பார், எனில் அதன்பின்னர் கட்டாயம் பதவியை ராஜினாமா செய்வார் எனவும், இளவரசர் சார்லசை மன்னராக முடி சூட்டுவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே 1937 ஆம் ஆண்டின் பிரதிநிதி சட்டத்தை மீண்டும் அமுல்படுத்தும் நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும் என அரண்மனை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்