என் வீட்டைக் காணோம்... புலம்பும் மூதாட்டி

Report Print Kabilan in பிரித்தானியா
0Shares
0Shares
Cineulagam.com

பிரித்தானியாவைச் சேர்ந்த மூதாட்டி ஒருவரின், மொபைல் வீட்டினை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ள சம்பவம் பரபரப்பாகியுள்ளது.

பிரித்தானியாவைச் சேர்ந்தவர் டிவோன். 70 வயதான இந்த மூதாட்டி, தன் கணவரை இழந்ததால் தனியாக மொபைல் வீடு ஒன்றில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், அவர் வெளியில் சென்று வந்து பார்த்தபோது, 40 அடி நீளம் கொண்ட அவரின் மொபைல் வீடு காணாமல் போயுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த டிவோன், மொபைல் வீடுகளை பாதுகாக்கும் அமைப்பிடம் புகார் அளித்துள்ளார்.

பின்னர் அவர் கூறுகையில், ‘என் கணவரும், நான் வளர்த்த நாயும் இறந்த பிறகு, நான் தனியாக வசித்து வருகிறேன். வயதாவதால் என் பிள்ளைகள், நண்பர்கள் வீடுகளுக்கு அருகே வசிக்க நினைத்து மொபைல் வீட்டை வாங்கினேன்.

அதன் மூலமாக ஒரு இடம் பிடிக்கவில்லை எனில் வேறு இடத்துக்குச் சென்றுவிடலாம். ஆனால், நான் வீட்டை வாங்கியதிலிருந்து என்னை யார் யாரோ மிரட்டிக் கொண்டே இருந்தனர்.

இவர்தான் என்று ஒருவரை மட்டும் என்னால் குறிப்பிட்டு சொல்லச் முடியவில்லை. இந்தப் பகுதியில் இருந்து வேறு இடத்திற்கு சென்று விட நினைத்தேன். அதற்குள் வீட்டையே எடுத்துக் கொண்டு சென்றுவிட்டார்கள்.

ஒரு இரவு முழுவதும் வீடின்றி கழித்தேன். இப்போது என் நண்பர்கள் வீட்டில் தங்கியிருக்கிறேன். என்ன செய்யப் போகிறேன் என்று தெரியவில்லை’ என தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்