பிரான்ஸ் ஜனாதிபதியின் இரவு விருந்தில் கலந்துகொள்ளும் ஒபாமா

Report Print Kabilan in அமெரிக்கா
0Shares
0Shares

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரானுடன், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா இரவு விருந்தில் கலந்து கொள்ள உள்ளார்.

நெப்போலியன் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள உள்ள ஒபாமா, அதன் பிறகு ஆரஞ்சு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி Stephane Richard-யின் Network of Industry Players of the Communication மாநாட்டில் கலந்துகொள்ள உள்ளார்.

இந்த மாநாடுகளை முடித்துவிட்டு, பிரான்ஸில் உள்ள Elysee மாளிகையில் நடைபெற உள்ள இரவு விருந்தில் கலந்துகொள்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரான்ஸின் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது ஒபாமா, தனது ஆதரவை இம்மானுவேல் மேக்ரானுக்கு அளித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்