கொடூரமாக தாக்கிய சிறை காவலர்கள்: கருச்சிதைவால் பாதிக்கப்பட்ட இளம்பெண்

Report Print Arbin Arbin in அமெரிக்கா
0Shares
0Shares
lankasrimarket.com

அமெரிக்காவில் சிறை காவலர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் கருச்சிதைவால் கடுமையாக பாதிக்கப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சிறையில் விதிகளை பின்பற்றாதவர்கள் என கூறி கைதிகளை காவலர்கள் கண்மூடித்தனமாக தாக்குவதாகவும், Martini Smith என்ற இளம்பெண் கருச்சிதைவு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் விசாரணையில் தற்போது தெரிய வந்துள்ளது.

டேசர் எனப்படும் கருவியால் சிறை காவலர்கள் கைதிகளை கண்மூடித்தனமாக தாக்குவதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் குறித்த விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதில் கடந்த 17 ஆண்டுகளில் 104 உயிரிழப்புகள் இந்த டேசர் கருவி பயன்படுத்தியதால் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க சிறைகளில் கைதிகள் கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதாக வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பானது என சிறை நிர்வாகம் மறுத்தாலும் Martini Smith வழக்கில் நீதிமன்றம் எழுப்பிய கேள்விகளுக்கு சிறை நிர்வாகம் உரிய விளக்கத்தை அளிக்க தவறியதாக கூறப்படுகிறது.

கலவரத்தில் ஈடுபடும் கைதிகளை கட்டுக்குள் கொண்டுவரவே டேசர் போன்ற ஆயுதங்களை பயன்படுத்தி வருவதாகவும் சிறை நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்