இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்: ஏன் தெரியுமா?

Report Print Santhan in அமெரிக்கா
0Shares
0Shares
lankasrimarket.com

அமெரிக்காவில் தயாரிக்கப்படும் பொருட்கள் பல்வேறு நாடுகளுக்கு இறக்குமதி செய்யப்படுகிறது. அப்படி இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது இந்தியாவும், சீனாவு அதிக வரியை விதித்துள்ளது.

ஆனால் அமெரிக்காவிலோ இந்திய பொருட்களுக்கு மிகக் குறைந்த அளவிலான வரியே விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் அமெரிக்க பொருட்களின் விலை மீதான வரியை குறைக்க வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் அமெரிக்க மோட்டார் வாகனங்கள் ஹார்லி டேவிட்சன் உள்ளிட்ட பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதே போல் சீனாவில் அமெரிக்க கார்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அமெரிக்காவில் சீன கார்களுக்கு 2.5 சதவீத வரி மட்டுமே விதிக்கப்படுகிறது. இது ஒரு சரியான வர்த்தகம் இல்லை.

மேலும், சீனா, இந்தியா நாடுகளில் அமெரிக்க பொருட்களின் மீதான வரியை குறைக்காவிட்டால், அவர்கள் விதித்துள்ள வரியைப் போலவே அமெரிக்காவிலும் அவர்கள் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்