டேட்டா பாவனையை கட்டுப்படுத்தும் புதிய அன்ரோயிட் அப்பிளிக்கேஷன்

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

ஸ்மார்ட் கைப்பேசிகளின் பாவனை அதிகரிப்பின் காரணமாக அதிகளவு டேட்டாவும் தேவைப்படுகின்றது.

இதனைக் கருத்தில்கொண்டு சில கைப்பேசி வலையமைப்பு நிறுவனங்கள் வரையறையற்ற டேட்டாவை வழங்கிவருகின்றன.

எனினும் அனேகமான நிறுவனங்கள் வழங்கும் டேட்டா மட்டுப்படுத்தப்பட்டவையாகும்.

இதன் காரணமாக ஸ்மார்ட் கைப்பேசிகளை பயன்படுத்தும்போது டேட்டா பாவனையை மட்டுப்படுத்த வேண்டிய அவசியம் காணப்படுகின்றது.

இப் பிரச்சினைக்கு தீர்வு தரக்கூடிய சில வசதிகள் ஏற்கணவே காணப்படுகின்றன.

எனினும் கூகுள் நிறுவனம் Datally எனும் புதிய அன்ரோயிட் அப்பிளிக்கேஷன் ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.

இதன் மூலம் எந்த அப்பிளிக்கேஷன் ஊடாக அதிகளவு டேட்டா வீணாகின்றது என்பதனை கண்டறிய முடியும்.

அத்துடன் பின்னணியில் டேட்டாக்கள் பயன்படுத்தப்படுவதை தடுக்கும் வசதியும் தரப்பட்டுள்ளது.

அதேபோன்று பேஸ்புக்கில் ஒரு போஸ்ட் அப்டேட் செய்வதற்கு சரியாக எவ்வளவு டேட்டா பயன்படுகின்றது போன்ற தகவல்களையும் அறிந்துகொள்ள முடியும்.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்