பிரபல சமூக ஊடக தளமான ட்விட்டர் வாய்ஸ் நோட் அனுப்பும் அமசத்தை புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது.
ட்விட்டர் சமீபத்தில் வாய்ஸ் நோட் அல்லது வாய்ஸ் மெசேஜ் அனுப்பும் அம்சத்தை DM என அழைக்கப்படும் Direct Message-களில் சோதிக்கத் தொடங்குவதாக அறிவித்துள்ளது.
இந்தப் புதிய அம்சத்தை இந்தியா, பிரேசில் மற்றும் ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளில் சோதிக்கப்படுகிறது.
வாய்ஸ் மெசேஜ் அம்சம் இன்னும் சோதனை நிலையில் உள்ளது, எனவே, இது இன்னும் தளத்தின் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கவில்லை. இது ட்விட்டரின் சமீபத்திய Update-ன் ஒரு பகுதியாகும்.
இந்தப் புதிய அம்சத்தின் மூலம் ட்விட்டர் பயனர்கள் DM-களில் 140 வினாடிகள் வரை நீளமுள்ள ஆடியோ செய்திகளை தங்கள் நண்பர்கள் மற்றும் அவர்களின் நெட்ஒர்க்கில் உள்ள அனைவருக்கும் அனுப்பலாம்.