பாலியல் பொம்மைகளுடன் திருமணம்! எதிர்காலத்தில் இதுவும் நடக்கும்

Report Print Deepthi Deepthi in ஆசியா

அதிரடி தொழில்நுட்பத்துடன் உருவாகியுள்ள பாலியல் பொம்மைகளின் மோகத்தில் இன்றைய மனிதர்கள் திளைக்கின்றனர்.

பார்ப்பதற்கு நிஜ மனிதர்கள் போலவே வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பொம்மைகள் மீது காதல் கொள்ளும் அளவுக்கு மனிதர்கள் இருக்கிறார்கள்.

சீனாவில் நபர் ஒருவர், தனது மனைவியுடன் எற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்து தனிமையில் வசித்து வந்தார். அப்படி தனிமையில் வாடிய அவரின் கவலையை போக்கியது அழகிய பாலியல் பொம்மைதான்.

ஆத்மாத்மாக அந்த பொம்மையை காதலித்து வந்த அவர், அதனை திருமணம் செய்துகொண்டேன் என்று கூறி மக்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்தார்.

இந்நிலையில், 2050 ஆம் ஆண்டில் அதிக மனிதர்கள் பாலியல் பொம்மையை திருமணம் செய்துகொள்ளும் நிலை ஏற்படும் என பாலியல் பொம்மைகள் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் கம்பெனியின் தலைமை அதிகாரியான Matt McMullen கூறியுள்ளார்.

இதுகுறித்து இவர் கூறியுள்ளதாவது, தற்போது நடைபெறும் திருமணங்கள் அனைத்தும் விவாகரத்திலேயே முடிகின்றன. 40 முதல் 50 சதவீதம் அமெரிக்காவிலும், 42 சதவீதம் தம்பதியினர் விவாகரத்து செய்துகொண்டனர்.

தம்பதியினரின் உணர்வுகள் பாதிப்பு மற்றும் ஒருவருக்கொருவர் செய்துகொள்ளும் துரோகங்கள் ஆகிய இரண்டுமே இந்த விவாகரத்திற்கு காரணமாக கூறப்படுகிறது.

ஆனால், பாலியல் பொம்மைகளிடம் அப்படி எதிர்பார்க்க முடியாது. எவ்வித உணர்வுகளும் இல்லாத அந்த பொம்மைகளை திருமணம் செய்துகொண்டால் வாழ்வில் எவ்வித பிரச்சனையும் இருக்காது என்று கருதி, எங்களிடம் பொம்மைகள் வாங்கிய சில வாடிக்கையாளர்கள் அந்த பொம்மையை திருமணம் செய்துகொண்டனர் என கூறியுள்ளார்.

பொருளாதார பிரச்சனை, உணர்வுரீதியான பிரச்சனை, சண்டை சச்சரவுகள் எதுவும் ஏற்படாத காரணத்தால் 2050 ஆம் ஆண்டில் இந்த பூமியில் பல மனிதர்கள் பாலியல் பொம்மையை சட்டப்படி திருமணம் செய்துகொள்வார்கள் என கூறியுள்ளார்.

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments