ஆப்கானிஸ்தானில் கடத்தப்பட்ட ஐநா சபை உறுப்பினர்: தனது மகனுடன் விடுவிப்பு

Report Print Kabilan in ஆசியா

மர்ம நபர்களால் ஆப்கானிஸ்தானில் கடத்தப்பட்ட ஐ.நா சபை பெண் உறுப்பினர் மற்றும் அவரது மகன் இருவரும் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் பணத்திற்காக கடத்தல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக, வெளிநாட்டினர் பலர் அங்கு கடந்த சில ஆண்டுகளில் கடத்தப்பட்டுள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் 22ஆம் திகதி, ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஐ.நா சபையின் பெண் உறுப்பினர், அவரது மகனுடன் காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவர்களது காரை வழிமறித்த மர்ம நபர்கள், கார் ஓட்டுநரை கொலை செய்துவிட்டு இருவரையும் கடத்திச் சென்றனர்.

இதனைத் தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் ஓட்டுநரின் உடல் மீட்கப்பட்டது. இந்நிலையில், கடத்தப்பட்ட ஐ.நா சபை உறுப்பினரும், அவரது மகனும் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து ஆப்கானிஸ்தான் நாட்டின் ஐ.நா சபை செயல் தலைவர் இங்கிரிட் ஹெய்டன் கூறுகையில், ‘இந்த கடத்தல் சம்பவத்தை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். கடத்தலின் போது எங்களில் ஒருவர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers