ராகு- கேது தோஷம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரம்

Report Print Jayapradha in ஜோதிடம்

ராகு- கேது தோஷம் ஒருவருக்கு ஏன் ஏற்படுகிறது என்பதற்கு எத்தனையோ விதமான காரணங்கள் சொல்லப்படுகின்றன.

அத்தகைய ராகு- கேது தோஷம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள சில எளிய பரிகார வழிமுறைகளை பின்பற்றி வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம்.

செய்ய வேண்டிய பரிகாரம்
  • ராகு காலங்களில் கோவிலுக்கு சென்று அங்குள்ள பாம்பு புற்றுக்கு பால் ஊற்றி அபிஷேகம் செய்யலாம்.
  • காளாஸ்திரி சென்று ராகு காலத்தில் பச்சைக் கற்பூர அபிஷேகம் செய்து வந்தால் சர்ப்ப தோஷம் விலகும்.
  • அம்மன், துர்க்கை, சரபேஸ்வரர் இவர்களுக்கு ராகு காலத்தில் விளக்கேற்றி வழிபாடு செய்து வந்தால் தோஷம் விலகும்.
  • கும்பகோணம் அருகில் உள்ள திருநாகேஸ்வரம் சென்று ராகு பகவானுக்கு பாலாபிஷேகம் செய்தும், அர்ச்சனை செய்தும் தோஷ நிவர்த்தி பெறலாம்.
  • ராமேஸ்வரம் சென்று கடலில் நீராடி சுவாமி தரிசனம் செய்து வந்தால் தோஷங்கள் நிவர்த்தியாகும்.
  • காஞ்சீபுரத்தில் உள்ள சித்திரகுப்தன் ஆலயம் சென்று அர்ச்சனை செய்து வழிபாடு செய்து வந்தால் கேது தோஷம் விலகும்.
  • தினமும் விநாயகப் பெருமானை வழிபட்டு வந்தால் தோஷம் விலகும். சங்கடஹர சதுர்த்தி அன்று அருகம்புல் மாலை விநாயகருக்கு சாத்தி வழிபட்டு வந்தால் தோஷம் அகலும்.
  • ராகு தோஷம் உடையவர்கள் தூங்கும்போது தலையணைக்கடியில் அருகம்புல் வைத்தும், கேது தோஷம் உடையவர்கள் தர்ப்பைப் புல்லையும் தலையணைக்கடியில் வைத்துப் படுத்து உறங்கினால் தோஷங்கள் அகலும். 9 வாரம் செய்யவும். அதன்பிறகு அந்த புல்லை கடலில் விட்டு விடவும்.
  • வீட்டில் விளக்கேற்றி ராகு, கேதுவின் காயத்ரி மந்திரங்களை சொல்லி வந்தால் தோஷங்கள் விலகும்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers