ராசி பலன்: இன்று இந்த ராசிகார்களுக்கு எல்லாம் நல்ல நாளாம்

Report Print Abisha in ஜோதிடம்

இன்று எந்த ராசிகாரர்களுக்கு நல்ல நாளாக உள்ளது என்பதை பார்க்கலாம்

மேஷம்

மேஷ ராசி நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல இனிமையான நிகழ்வுகளை தரக்கூடிய நாளாகவே செல்லும்.

 • உங்களுடைய புதிய முயற்சிகள் அனைத்தையும் வெற்றிகரமாக முடிப்பீர்கள்.
 • புது தொழில் முயற்சிகள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து இடுவது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. இளைய சகோதரர்களுடன் சற்று கருத்து வேறுபாடு வர வாய்ப்பு உண்டு என்பதால் பொறுமையையும், நிதானத்தையும் கடைபிடிக்கவும்.
 • ஒற்றுமை மேம்படும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் காணும் நல்ல நாள் ஆகும்.
 • சற்று வேலைப்பளு அதிகமாக தான் இருக்கும். இருப்பினும், நல்ல பெயர் பெறுவீர்கள்.
 • சோசியல் மீடியாவில் அதிக நேரம் செலவிட வாய்ப்பு உண்டு.
ரிஷப
 • ரிஷப ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் பணிச்சுமை அதிகமாக இருக்கும்.
 • இதனால் குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்ய முடியாமல் தவிப்பீர்கள்.
 • கணவன் மனைவி ஒற்றுமையில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அவற்றை திறமையாக சமாளிப்பீர்கள்
 • உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிர்வாகத்தில் நல்ல பெயர் கிடைக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் சற்று காலதாமதமாக வாய்ப்பு உண்டு.
 • மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் தேவை.

மிதுனம்

மிதுன ராசி நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும்.

 • சந்திரன் ஒன்பதாமிடத்தில் சஞ்சரிப்பது உங்களுடைய முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும்.
 • சொந்தத் தொழில் செய்பவர்கள் பல புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள்.
 • பொருளாதாரத்தை பொருத்தவரை சற்று பற்றாக்குறை இருந்து வந்தாலும், வெற்றிகரமாக சமாளிப்பீர்கள்.
 • சொத்து சம்பந்தப்பட்ட முடிவுகளை இன்றும், நாளையும் எடுக்க வேண்டாம்.
 • உறவினர்கள் மற்றும் நண்பர்களால் மகிழ்ச்சி உண்டாகும்.

கடகம்

கடக ராசி நண்பர்களுக்கு இன்றைய நாள் முழுவதும் சந்திராஷ்டமம் இருப்பதால் கூடுமான வரை வீண் அலைச்சல்களை தவிர்த்துக் கொள்வது நல்லது.

 • உங்கள் பேச்சு உங்களுக்கு எதிராகவே திருப்பப்படும் என்பதால் யாகாவா ராயினும் நாகாக்க என்பதற்கு இணங்க பேச்சில் கவனமும், நிதானமும் தேவை.
 • வயதானவர்களுக்கு சற்று உடல் நலனில் தொல்லைகள் கொடுத்தாலும் நன்மையே உண்டாகும்.
 • பெண்களைப் பொறுத்தவரை கணவன் மனைவி உறவில் சற்று விட்டுக்கொடுத்து செல்வது பிரச்சனைகள் தீர்ந்து குடும்பத்தில் அமைதி ஏற்பட வழிவகுக்கும்.
 • மாணவர்களின் கல்வியில் கூடுதல் கவனம் தேவைப்படும் கடன் கொடுப்பது ஜாமீன் கையெழுத்து இடுவது போன்றவற்றில் சற்று எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது.
 • கட்டுமான தொழில் கொடுக்கல் வாங்கல் வரவு செலவு போன்றவற்றில் ஈடுபடுபவர்களுக்கு சற்று சிரமங்கள் இருந்தாலும் இறுதியில் வெற்றி கிடைக்கும்
சிம்மம்

சிம்ம ராசி நண்பர்களுக்கு சந்திரன் ஏழாம் இடத்தில் சஞ்சாரம் செய்வது நல்ல பலன்களைக் கொடுக்கும்.

 • புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகும்.
 • ஒருசிலர் வெளிநாடு செல்வதை பற்றிய சிந்தனைகளில் ஈடுபடுவர் இவைகளில் வெற்றி கிடைக்கும்.
 • நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயமும், அனுகூலமும் உண்டாகும். கணவன் மனைவி உறவு ஒற்றுமையாக இருக்கும்.
 • சுபகாரியங்கள் திருமண முயற்சிகள் ஆகியவை வெற்றியடையும்.
 • பெண்களுக்கு இனிமையான நாள் ஆகும்.
கன்னி
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்றைய நாள் இனிமையான நாள் ஆகும். ஆறாம் இடத்தில் சந்திரன் சஞ்சாரம் செய்வது உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல பெயரை பெற்றுத் தரும்.
 • குறிப்பாக வெளிநாடுகளில் வேலை செய்பவர்களுக்கு நிர்வாகத்தில் நல்ல பெயர் கிடைக்கும்.
 • உத்தியோக உயர்வு மற்றும் ஊதிய உயர்வைப் பற்றி பேச இன்றைய நாள் உகந்த நாள் ஆகும்.
 • விசா சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்க வாய்ப்பு உண்டாகும்.
 • புதிய தொழில் முயற்சிகளை பற்றிய சிந்தனைகள் ஏற்படும் கட்டுமானத்துறை உணவுத்துறை ஆயில் அண்ட் கேஸ் போன்றவற்றில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான நாள் ஆகும்.
 • வேலைப்பளு அதிகமாக இருப்பதால் உடல் அசதி காணப்படும்.

துலாம்

துலாம் ராசி நண்பர்களுக்கு இன்றைய நாள் இனிமையான நாள் ஆகும்.

 • புதிய தொழில் வாய்ப்புகள் பற்றிய சிந்தனைகள் ஏற்படும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு சிறப்பான நாள் ஆகும்.
 • உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு தனது வேலையை மாற்றிக் கொள்வது சம்பந்தமான சிந்தனைகளில் ஈடுபடுவார்கள்.
 • மாணவர்களின் கல்வித் திறன் பளிச்சிடும். பெண்களுக்கு உகந்த நாள் ஆகும்.
 • குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும்.
 • உறவினர்கள் மற்றும் நண்பர்களால் மனதுக்கு இனிய நிகழ்வுகளும், தன லாபமும் உண்டாகும்.

விருச்சிகம்

விருச்சக ராசி நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும்.

 • உங்கள் ராசிக்கு சந்திரன் நான்காம் இடத்தில் சஞ்சரிப்பது உங்களுடைய திறனை வெளிப்படுத்தும் நல்ல நாள் ஆகும்.
 • கலைத்துறையில் இருப்பவர்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும்.
 • உணவு துறை சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும்.
 • பெண்களுக்கு உன்னதமான நாள் ஆகும். கணவன் மனைவி ஒற்றுமை மேம்படும்.
 • வயதானவர்களுக்கு சிறு சிறு உடல் உபாதைகள் ஏற்பட்டு நீங்கும்.

தனுசு

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும்.

 • புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். வெளிநாட்டு பிரயாணங்கள் பற்றிய நல்ல தகவல்கள் வந்து சேரும்.
 • வெளிநாடுகளில் வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு உத்தியோகத்தில் உயர்வு உண்டாகும்.
 • கணவன் மனைவியிடையே சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டு விலகும்.
 • பேச்சில் நிதானம் தேவை கோபத்தை குறைத்து கொள்ளவும்.
 • சட்ட உணர்ச்சிவசப்படக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும் என்பதால் நிதானம் தேவை.

மகரம்

மகர ராசி நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும்.

 • திருமணம் போன்ற சுபகாரிய நிகழ்வுகள் வெற்றியில் முடியும். பெண்களுக்கு இனிமையான நாள் ஆகும்.
 • குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
 • கணவன் மனைவி ஒற்றுமை மேம்படும்.
 • குழந்தைகளால் மகிழ்ச்சியும், சந்தோஷமும் உண்டாகும். குடும்பத்தில் உள்ள பெரியவர்களுடன் சற்று அனுசரித்துச் செல்ல வேண்டும்.
 • வெளிநாடு செல்ல முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும் நாள் ஆகும்.

கும்பம்

கும்ப ராசி நண்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாள் ஆகும்.

 • உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை சற்று அதிகமாக இருந்தாலும் அவைகளில் வெற்றி கிடைக்கும்.
 • நிர்வாகத்தில் நல்ல பெயரை பெற்றுக் கொள்வீர்கள்.
 • உத்தியோக உயர்வு ஊதிய உயர்வைப் பற்றி பேசுவதற்கு உகந்த நாள் இன்றைய நாள் ஆகும்.
 • கப்பல் விமானத்துறை உணவுத்துறை போன்றவற்றில் இருப்பவர்களுக்கு உத்தியோகத்தில் நல்ல பெயர் கிடைக்கும்.
 • சொந்த தொழில் செய்பவர்களுக்கு சிறப்பான நாள் ஆகும். புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

மீனம்

மீன ராசி நண்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாள் ஆகும்.

 • சுபச் செலவுகள் உங்களை தேடி வரும். உறவினர்கள் மற்றும் நண்பர்களால் தனவரவும் மகிழ்ச்சியும் உண்டாகும்.
 • திருமண காரியங்கள் கைகூடி வரும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நன்மையில் முடியும். உடல் நலம் நன்றாக இருந்து வரும்.
 • கணவன் மனைவி உறவு அந்நியோன்யமாக இருக்கும்.
 • காதல் வலையில் விழுந்து இருப்பவர்கள் மகிழ்ச்சியான சந்திப்புகளை பெறுவர்.
 • புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்