அவுஸ்திரேலியாவை விழுங்கும் காட்டுத்தீ: பிரித்தானிய கார் பந்தய வீரர் அள்ளிக்கொடுத்த நிதியுதவி

Report Print Arbin Arbin in அவுஸ்திரேலியா
194Shares

அவுஸ்திரேலியாவில் பற்றியெரியும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த பிரித்தானிய கார் பந்தய வீரர் லூயிஸ் ஹாமில்டன் பெருந்தொகையை நிதியுதவியாக அளித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மற்றும் விக்டோரியா மாகாணங்களில் கடந்த ஆண்டு மத்திய பகுதியில் இருந்தே காட்டுத் தீ கொழுந்துவிட்டெரிந்து வருகிறது.

இதில் மில்லியன் கணக்கான ஏக்கர் நிலங்கள் தீக்கிரையாகியுள்ளன. ஒரு பில்லியனுக்கும் அதிகமான விலங்குகள் உடல் கருகி பலியாகியுள்ளன.

மட்டுமின்றி காட்டுத்தீயில் சிக்கி இதுவரை 28 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர வழிவகுத்துள்ளதாகவும் பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் அவுஸ்திரேலிய காட்டுத்தீயால் ஏற்பட்டுள்ள சேதங்களை ஈடுசெய்ய உலக நாடுகளில் இருந்து பலர் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

அந்தவகையில் பிரித்தானிய கார் பந்தய வீரரான லூயிஸ் ஹாமில்டன் 262,000 பவுண்டுகள் தொகையை அள்ளிக் கொடுத்துள்ளார்.

மட்டுமின்றி உலகெங்கிலும் இருக்கும் தமது ரசிகர்களையும் நிதியுதவி அளிக்க கோரியுள்ளார்.

காட்டுத்தீயில் சிக்கி ஒரு பில்லியன் விலங்குகள் கொல்லப்பட்ட சம்பவம் தம்மை உலுக்கியதாகவும் லூயிஸ் ஹாமில்டன் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்