அடிக்கடி குளியலறையில் தண்ணீர் தேங்கும் மர்மம்: கண்டுபிடிக்க முயன்றபோது தெரியவந்த அதிரவைத்த உண்மை

Report Print Balamanuvelan in அவுஸ்திரேலியா
0Shares

அவுஸ்திரேலியாவில் தங்கள் வீட்டுக் குளியலறையில் அடிக்கடி தண்ணீர் தேங்குவதன் மர்மம் தெரியாமல் குழப்பமடைந்தனர் ஒரு தம்பதியர்.

குயின்ஸ்லாந்தில் வாழும் அந்த தம்பதி, கடைசியாக என்னதான் பிரச்சினை என்று பார்த்துவிடுவோம் என குளியலறையில் தண்ணீர் செல்லும் துவாரத்தை பரிசோதிக்க, அங்கே, பளிச்சென்று தெரிந்துள்ளன இரண்டு கண்கள்.

வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில், அந்த துவாரத்தை பரிசோதனை செய்யும் ஒருவர், அதனுள்ளிருந்து இரண்டு மீற்றர் நீளமுடைய மலைப்பாம்பு ஒன்றை இலாவகமாக வெளியே எடுப்பதைக் காணலாம்.

ஆம், எப்படியோ வீட்டுக்குள் நுழைந்த அந்த மலைப்பாம்பு, குளியலறைக்குள்ளிருந்த தண்ணீர் வெளியேறும் துவாரத்துக்குள் பதுங்கியிருக்கிறது.

அதனால்தான், அவ்வப்போது அங்கு தண்ணீர் வெளியேறாமல் தேங்குகிறது என்பதை புரிந்துகொண்ட தம்பதியர், அந்த வீடியோவை சமூக ஊடகம் ஒன்றில் வெளியிட்டுள்ளனர்.

வீடியோவைப் பார்வையிட்ட ஒரு பெண், அந்த துவாரத்துக்குள்ளிருந்து பாம்பு வரும் என்று நான் எதிர்பார்க்கவேயில்லை என்கிறார்.

இன்னொருவர், முதல் வேலையாக வீட்டிலுள்ள வடிகுழாய்களை எல்லாம் சரி செய்யப்போகிறேன் என்கிறார்.

அந்த பாம்பு சாக்கடையிலிருந்து எப்படியோ கழிவுநீர் வடி குழாய் வழியாக வீட்டுக்குள் வந்திருக்கலாம் என கருத்து தெரிவித்துள்ளார் ஒருவர்.

அவுஸ்திரேலியாவில் பாம்புகள் சகஜம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே, பேசாமல் அவுஸ்திரேலியாவை விலங்குகளுக்கே கொடுத்துவிட்டு நாம் வெளியேறிவிடுவோம் என்கிறார் மற்றொருவர்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்