சொட்டையில் முடி வளர்ச்சியை தூண்டும் டிப்ஸ்: சில வாரத்தில் பலன் தெரியுமாம்

Report Print Printha in அழகு
1128Shares
1128Shares
lankasrimarket.com

தலைமுடி அதிகமாக உதிர தொடங்கினால் அது நாளடைவில் சொட்டையாக மாறிவிடும். இப்பிரச்சனையை ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இருபாலருமே சந்திக்கின்றனர்.

இதற்கு மரபணுக்கள் மட்டும் காரணமல்ல, ஊட்டச்சத்து இல்லாத உணவுகளை உண்பது, மன அழுத்தம், பதற்றம் போன்ற வேறு சில காரணங்களும் உள்ளது. அதற்கான சில இயற்கை வழிகள் இதோ,

கடுகு எண்ணெய்

ஒரு கப் கடுகு எண்ணெயை ஊற்றி சூடேற்றி, அதில் 4 டேபிள் ஸ்பூன் மருதாணி இலைகளை சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி குளிர்ந்த பின் வடிகட்டி தினமும் தலையில் சொட்டை உள்ள இடத்தில் தடவி வந்தால், சில வாரங்களில் முடியின் வளர்ச்சியைக் காணலாம்.

வெங்காயம்

சொட்டையான இடத்தில் வெங்காயத்தை அரைத்து பேஸ்ட் செய்து தடவி சிறிது நேரம் கழித்து அவ்விடத்தில் தேனை தடவ வேண்டும். இப்படி அடிக்கடி செய்தால், முடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.

முட்டை

ஒரு முட்டையின் மஞ்சள் கருவுடன் சிறிது தேன் கலந்து, அதை ஸ்கால்ப் மற்றும் முடியில் தடவி, 30 நிமிடம் கழித்து ஷாம்பு பயன்படுத்தி முடியை அலச வேண்டும். இதை வாரத்திற்கு 1 முறை செய்து வர வேண்டும்.

தயிர்

2 டேபிள் ஸ்பூன் தயிருடன், 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து பேஸ்ட் செய்து, அதை ஸ்கால்ப் மற்றும் முடியில் தடவி 1 மணிநேரம் கழித்து நீரில் அலச வேண்டும். அதனால் முடியின் வளர்ச்சி தூண்டப்படும்.

நெல்லிக்காய்

நெல்லிக்காயை துண்டுகளாக்கி, தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி அந்த எண்ணெய் குளிர்ந்ததும், தினமும் அதை தலைக்கு தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து வந்தால், தலைமுடியின் வளர்ச்சி தூண்டப்படும்.

தேங்காய் பால்

தினமும் தேங்காய் பாலை கொண்டு முடியின் ஸ்கால்ப்பை மசாஜ் செய்து, 20 நிமிடம் ஊற வைத்து குளித்து வந்தால், முடி ஊட்டம் பெற்று, தலைமுடியின் வளர்ச்சியும் அதிகரிக்கும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்