கனடிய விமானங்களில் புதிய பாதுகாப்பு விதிமுறைகள்

Report Print Mohana in கனடா

கனடிய மற்றும் சர்வதேச விமானங்களில் சில சிறிய கத்திகளை கொண்டு செல்லாம் என்ற புதிய பாதுகாப்பு விதிமுறை திங்கள்கிழமையிலிருந்து நடைமுறைக்கு வருகின்றதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளேட் கத்திகள் ஆறு சென்ரி மீற்றர்கள் வரை நீளமான கிட்டத்தட்ட ஒரு பெரிய பேப்பர் கிளிப் அளவிலான கத்திககள் உள்நாட்டு மற்றும் அதிகமான சர்வதேச விமானங்களிலும் எடுத்து செல்லாம் என கனடா போக்குவரத்து அறிவித்துள்ளது.

எந்த அளவிலுமான றேசர் கத்திகள் மற்றும் பெட்டி வெட்டிகள் யு.எஸ். பிணைப்பு விமானங்களில் இன்னமும் தடை செய்யப்பட்டுள்ளன.

திங்கள்கிழமை நடைமுறைக்கு வரும் மற்றொரு மாற்றம் சில குறிப்பிட்ட பவுடர்கள் மற்றும் சிறுமணி பொருட்கள் 350-மில்லிலிட்டர்கள் அல்லது அதற்கு மேற்பட்ட அளவு கொண்டவை திங்கள்கிழமையிலிருந்த தடை செய்யப்படும்.

குழந்தைகளின் பவுடர்கள், சமையல் பவுடர்கள் மற்றும் குளியல் உப்புக்கள் போன்றனவும் இவற்றுள் அடங்கும்.

சர்வதேச நெறிகளிற்கு இசைய இந்த சீரமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்