பாரிய யாகூ ஊடுருவல் குற்றத்தை ஒப்புக்கொண்ட கனடிய நபர்!

Report Print Mohana in கனடா

ஒன்ராறியோ அன்காஸ்ரரை சேர்ந்த மனிதன் பாரிய யாகூ ஹாக் செய்த குற்றத்தை ஒப்புகொண்டுள்ளார் என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

கணனி மோசடிக்காக சதிசெய்தமை எட்டு எண்ணிக்கையான மோசமான அடையாள திருட்டு தொடர்பாக 500மில்லியன் யாகூ கணக்குகளை ஹக்செய்தமை போன்ற குற்றங்கள் இவர்மீது சுமத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. செவ்வாய்கிழமை இவர் தனது குற்றங்களை ஒப்பு கொண்டுள்ளார்.

ரஷ்ய உளவுத்துறை முகவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இவர் நடந்து கொண்டதாக யு.எஸ்.அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஊடுருவல் ரஷ்ய ஊடகவியலாளர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளை இலக்கு வைத்து நடாத்தப்பட்டது. பிராரொவ் எனப்படும் இந்நபரால் பெறப்பட்ட தகவல்கள் அந்த நபர்களை உளவு பார்க்க உபயோகப்படுத்த பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிராரொவ் மார்ச் மாதம் யு.எஸ். அரசாங்கம் சார்பில் ஒப்புவித்தல் சட்டத்தின் கீழ் ஆர்சிஎம்பியினரால் கைது செய்யப்பட்டார.;

இவர் அதிக பட்ச சிறைத்தண்டனையாக 26 வருடங்களை எதிர் பார்க்கலாம் எனவும் ஆனால் குற்றத்தை ஒப்பு கொண்டமை தண்டனை காலத்தை குறைவாக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. பிப்ரவரி 20ல் தண்டனை ஆரம்பிக்கையில் ஏழு முதல் ஒன்பது ஆண்டுகளாக குறைக்கப்படலாம் எனவும் கூறப்படுகின்றது.

பெற்றோர்கள் தங்கள் மகன் குற்றமற்றவன் என்ற நம்பிக்கையை கடைப்பிடித்தனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்