பிரெஞ்சு மொழி பேசாததால் கனடாவில் அவமதிக்கப்பட்ட நபர்

Report Print Balamanuvelan in கனடா
190Shares
190Shares
lankasrimarket.com

போலந்து நாட்டைச் சேர்ந்த 67 வயதான Zbigniew Malysa, 20 ஆண்டுகளாக கனடாவின் Quebec நகரத்தில் வசித்து வருகிறார்.

உயர் இரத்த அழுத்தம் காரணமாக அங்குள்ள CHUM மருத்துவமனைக்கு சென்ற Malysa, பிரெஞ்சு மொழியில் பேசாததால் அங்குள்ள மருத்துவர் ஒருவர் அவரை அவமதித்ததோடு, இவரைப் போன்றவர்களால் Quebec நகரத்தின் மருத்துவத்துறைக்கு நஷ்டம் ஏற்படுவதாகவும் ஏளனமாகக் கூறியுள்ளார்.

மற்றவர்கள் முன்பு தன்னை அவமதித்ததோடு, சில மருத்துவ சோதனைகளையும் மறுத்து விட்டதாகவும் Malysa தெரிவிக்கிறார்.

அவரது மகளான Suzie Malysa, Facebookஇல் வெளியிட்டுள்ள இடுகை ஒன்றில், “உயிர் காக்கும் மருத்துவத்துறையில் இந்தக் காலத்தில் இப்படிப்பட்ட பாகுபாடு நிகழக்கூடாது, பிரெஞ்சு மொழி பேசாததால் நோயாளிகளை அவமதிக்கும் இவர் Medical License வைத்திருக்கத் தகுதியற்றவர் என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

மருத்துவர் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாக மறுப்பு தெரிவித்துள்ள மருத்துவமனை நிர்வாகம், பிரெஞ்சு மொழி பேசாத நோயாளிகளுக்காக மொழி பெயர்ப்பாளர் உட்பட பல வசதிகளைத் தாங்கள் மேற்கொண்டுள்ளதாகவும் ஆனால் தங்களால் அனைத்து சேவைகளையும் ஆங்கிலத்தில் வழங்க இயலாது என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்