கனடாவுக்கு வர விரும்புகிறேன்: கோரிக்கை விடுக்கும் தீவிரவாதி

Report Print Balamanuvelan in கனடா
247Shares
247Shares
ibctamil.com

ஐஎஸ் தீவிரவாதி என்ற சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டு சிரிய சிறையில் அடைக்கப்பட்டுள்ள British-Canadian நபர் தன்னை விடுவிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளான்.

கனடா நாட்டுப் பிரதிநிதிகள் அவனுடன் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டபோது, அவன் தான் கனடாவுக்கு வர விரும்புவதாகவும் தன்னை மீட்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளான்.

பிரித்தானியப் பத்திரிகைகளால் "Jihadi Jack" என்று அழைக்கப்படும் Jack Letts, தீவிரவாதக் குழுவைச் சேர்ந்தவனாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் குர்திஷ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டான்.

ஜனவரி 10 ஆம் திகதி கனடா அதிகாரிகளுடன் அவன் பேசியதை அவர்கள் பதிவு செய்துள்ளனர்.

அதில் அவன் “தயவு செய்து என்னை இங்கிருந்து அழைத்துச் செல்லுங்கள், என்னை நீங்கள் சிறையில் அடைத்தாலும் பரவாயில்லை, எப்படியாவது என்னை இங்கிருந்து மீட்டால் போதும்” என்று கூறியுள்ளான்.

அவனிடம் உன் தாய் தந்தையரிடம் போக விரும்புகிறாயா என்று கேட்டதற்கு, அவன் சொல்லும் ஒரே பதில் நான் கனடாவுக்கு வர விரும்புகிறேன் என்பதே.

தனியாக சிறையில் அடைக்கப்பட்டிருந்ததால் பைத்தியம் பிடித்தது போலாகி தற்கொலைக்கு முயன்றதாகவும் குர்திஷ் அதிகாரிகள் தன்னைக் காப்பாற்றி பலர் இருக்கும் அறையில் அடைத்துள்ளதாகவும் அவன் தெரிவித்தான்.

அவனை சிரியாவிலிருந்து மீட்பதற்கு பல தடைகள் உள்ளன. அவைகளில் முக்கியமானது Jack Lettsஐ கைது செய்தது ஒரு நாட்டு அரசாங்கம் அல்ல, Kurdish YPG militia என்னும் தனியார் ராணுவக்குழு.

கனடாவிடமா? பிரித்தானியாவிடமா? என்றாலும் இந்தப் பிரச்சினையை தீர்க்கும் நடவடிக்கையில் கனடா ஈடுபட்டுள்ளதாக கனடா நாட்டு தூதரக அதிகாரி ஒருவர் Lettsஇடம் தெரிவித்துள்ளார்.

அதேபோல் கனடா அரசு Lettsஇன் பெற்றோருக்கு அரசு அவனை மீட்பதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளது.

அவனது பெற்றோர் தாங்கள் அவனை நேசிப்பதாகவும், அவனை எப்படியாவது மீட்டு கனடாவுக்கு அனுப்பும்படியும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இன்னிலையில் கனடா பிரதிநிதிகளிடம் பேசிய Letts தனக்கு உடல் நலக்குறைவும் மன நலப் பிரச்சினையும் உள்ளதாகத் தெரிவித்துள்ளான்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்