நடுவானில் இரு விமானங்கள் மோதல்: ஒருவர் பலி

Report Print Balamanuvelan in கனடா

கனடாவில் இரண்டு விமானங்கள் நடுவானில் மோதிக்கொண்ட அரியவகை விபத்தொன்றில் ஒரு விமானம் தரையில் சென்று மோதியதில் அதில் பயணித்த ஒருவர் பலியானார்.

கனடாவின் Ottawa பகுதியில் இரு சிறு விமானங்கள் மோதிக் கொணடன.

இப்படி நடுவானில் விமானங்கள் மோதிக் கொள்வது அபூர்வம் என வல்லுநர்கள் கூறும் நிலையில் இந்த விபத்து எப்படி நடந்தது என்பது தெரியவில்லை.

மோதிக் கொண்ட விமானங்களில் ஒரு விமானம் McGee Side Road என்னும் சாலையில் போய் மோதி விழுந்தது.

இரண்டு பேர் பயணம் செய்த இரண்டாவது விமானம் Ottawa சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டு பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

தரையில் மோதிய Cessna 150 ரக விமானத்தில் பயணித்த நபர் பலத்த காயம் காரணமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மருத்துவ உதவிக்குழுவினர் தெரிவித்தனர். இரண்டாவது விமானத்தில் பயணித்தவர்களுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.

11 பேர் பயணிக்கும் வசதி கொண்ட Piper Cheyenne ரக விமானமான இரண்டாவது விமானத்தின் பைலட், ஒரு சிறிய விமானம் தனது விமானத்தின் அடிப்பகுதியில் மோதி முன் பக்க சக்கரத்தை சேதப்படுத்தி விட்டதாக விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.

முதல் விமானம் சுழன்றுகொண்டே தரையை நோக்கி வேகமாக சென்றதாக, விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளதோடு, அவர்கள் அது ஒரு பயிற்சி என்று முதலில் நினைத்ததாகவும், பின்னர் பொலிஸ் மற்றும் ஆம்புலன்ஸ் வருவதைக் கண்ட பின்னரே அது ஒரு விபத்து என அறிந்து கொண்டதாகவும் தெரிவித்தனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers