கிராமத்தில் தொடர் மரணங்கள், சாபம் எனக்கூறும் ஆதிவாசிகள்: மர்ம பின்னணி

Report Print Balamanuvelan in கனடா

கனடாவின் Nanavut பகுதியில் அமைந்துள்ள, King William தீவின் ஒரு குடியிருப்பு Gjoa Haven என்னும் சிறு கிராமம்.

திடீரென வரிசையாக அந்த கிராமத்தைச் சேர்ந்த பலர் இறந்துபோக, அந்த கிராமத்தில் வாழும் பூர்வக்குடியினரான Inuits என்னும் ஆதிவாசிகள், அந்த மரணங்களுக்கு காரணம் சாபம்தான் என்கின்றனர்.

HMS Erebus மற்றும் HMS Terror என்னும் இரண்டு போர்க்கப்பல்கள் அப்பகுதியில் மூழ்கிய நிலையில், மீண்டும் கனடாவைச் சேர்ந்த ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் அவற்றைக் கண்டுபிடித்தனர்.

அவர்கள்தான் சாபங்களை கிளப்பி விட்டதாக குற்றம் சாட்டுகிறார்கள் Gjoa Haven கிராமத்தினர்.

1845ஆம் ஆண்டு Sir John Franklinஇன் பிரித்தானிய போர் கப்பல்கள் இரண்டு அப்பகுதியை கடக்க முயன்றபோது, King William தீவினருகே மாயமாகின. பின்னர் சமீபத்தில் அக்கப்பல்களின் எஞ்சிய பகுதிகள் கனடா நாட்டு ஆழ்கடல் நீச்சல் வீரர்களால் கண்டு பிடிக்கப்பட்டன.

அந்த ஆழ்கடல் நீச்சல் வீரர்கள், மூழ்கிய கப்பல்களை தொந்தரவு செய்த பிறகுதான், Gjoa Haven கிராமத்தில் தொடர்ந்து உயிரிழப்புகள் நடப்பதாக தெரிவிக்கும் அக்கிராமவாசிகள், சபிக்கப்பட்ட அந்த கப்பல்களின் எச்சங்களை மீட்டதுதான் சாபத்தை ஏற்படுத்தி விட்டதாகத் தெரிவிக்கின்றனர்.

அந்த கப்பல்களில் பயணித்த 129பேரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில், அந்த இடத்தில் ஆய்வு நடத்தியதால் கடவுள்களின் கோபத்தை தூண்டி விட்டதாகவும், அதனால்தான் தங்கள் கிராமத்தில் உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும் கருதுகின்றனர் Gjoa Haven கிராமத்தினர்.

தண்ணீரில் மூழ்கி இறந்தவர்கள் ஓய்வெடுக்கும் அந்த இடம் புனிதமானது என்றும், அதை தொந்தரவு செய்யக்கூடாது என்றும் கூறுகின்றனர் அவர்கள்.

மூழ்கிய அந்த கப்பல்களின் எச்சங்கள் சபிக்கப்பட்டவை என்றும், அவற்றை தொந்தரவு செய்யக்கூடாது என்றும் Inuits ஆதிவாசிகள் விரும்புகின்றனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers