இன்சுலின் பிறந்த இடத்தை நோக்கி படையெடுக்கும் அமெரிக்கர்கள்: காரணம்?

Report Print Balamanuvelan in கனடா

அமெரிக்காவில் நீரிழிவு நோய்க்கான சிகிச்சையில் பயன்படும் இன்சுலினின் விலை அதிகமாக இருப்பதால், அமெரிக்கர்கள் இன்சுலின் பிறந்த இடம் அமைந்திருக்கும் கனடாவை நோக்கி படையெடுத்து வருகிறார்கள்.

அமெரிக்காவின் மின்னசோட்டாவிலிருந்து Caravan to Canada என்று அழைக்கப்படும் ஒரு குழு ஒண்டாரியோவிலுள்ள லண்டனை வந்தடைந்தது.

அந்தக் குழுவினர் வந்த நோக்கம், வகை 1 நீரிழிவு நோய்க்கான மருந்து வாங்குவது. அந்த கேரவனில் சுமார் 20 பேர் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் Nicole Smith-Holt.

அவர் தனது 26 வயது மகனுக்கு சரியாக இன்சுலின் வாங்கிக் கொடுக்க முடியாததால் மகனை சாகக் கொடுத்த தாய்.

Smith-Holt இரண்டாவது முறையாக கனடா வருகிறார். முற்காலத்திலும் இன்சுலின் வாங்குவதற்காக மெக்சிகோவுக்கும் கனடாவுக்கும் அலைந்தது போலவே இப்போதும் அமெரிக்கர்கள் அலைவதாக தெரிவிக்கிறார் அவர்.

அமெரிக்காவில் ஆண்டொன்றிற்கு இன்சுலினுக்காக செலவிடும் தொகை, 2012இல் 2,864 டொலர்களாக இருந்தது, 2016இல் கிட்டத்தட்ட இரட்டிப்பாகி 5,705 டொலர்கள் ஆனது. அமெரிக்காவின் மின்னசோட்டாவில் ஒரு இன்சுலின் பாட்டிலின் விலை 320 டொலர்களாக இருக்கும் நிலையில், கனடாவில் அதே இன்சுலின் பாட்டில் ஒன்றின் விலை வெறும் 30 டொலர்கள்தான்.

இதற்கிடையில் அமெரிக்காவிலிருந்து கனடா வந்துள்ள கேரவன், லண்டனிலுள்ள Banting House என்னும் இடத்தை சந்தித்து செல்ல இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம், Banting House இன்சுலின் பிறந்த இடம் என்று அழைக்கப்படுகிறது.

தனது சகாவான Charles Bestஉடன் இணைந்து இன்சுலினைக் கண்டுபிடித்த கனேடிய அறிவியலாளரான Frederick Banting, அங்குதான் 1920 முதல் 1921 வரை வாழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்றும் இன்சுலின் தொடர்பான ஆராய்ச்சிகளில் பெரும்பான்மையும் டொராண்டோ பல்கலைக்கழகத்திலும், டொராண்டோவிலுள்ள Banting நிறுவனத்திலும்தான் நடந்தன. அமெரிக்காவும் நியாயமான விலையில் இன்சுலின் கிடைக்க தக்க நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாக தெரிவிக்கிறார் Smith-Holt.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers