கனடா - அமெரிக்கா எல்லையில் நடந்த சாலை விபத்தில் ஒருவர் பலி! பொலிசார் வெளியிட்ட புகைப்படம்

Report Print Raju Raju in கனடா

கனடா - அமெரிக்க எல்லையில் நடந்த சாலை விபத்தில் காரில் பயணம் செய்த இருவரில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கனடாவின் burlington நகரை சேர்ந்த 73 வயது முதியவர் ஒருவர் தனது நண்பருடன் காரில் கனடா - அமெரிக்கா எல்லையில் உள்ள ueenston-Lewiston பாலம் அருகே சென்ற போது கார் விபத்தில் சிக்கியதாக ஒன்றாறியோ பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் 73 வயது முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

அவருடன் காரில் பயணித்த இன்னொரு நபர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரும் burlington நகரை சேர்ந்தவர் என தெரிவித்துள்ள பொலிசார் அந்த நபரின் உயிருக்கு ஆபத்தில்லை என தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த கார் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்