எல்லையில் வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனையிட்ட பொலிசார்: போத்தலில் இருந்த மனித மூளை!

Report Print Balamanuvelan in கனடா

கனேடிய அமெரிக்க எல்லையில் தபால் வாகனம் ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனையிட்ட பொலிசார் கண்களில் அசாதாரணமான ஒரு பொருள் பட்டது.

அது தெளிவான போத்தல் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த மனித மூளை! கனடாவின் ரொரன்றோவிலிருந்து அமெரிக்காவின் Wisconsinக்கு அனுப்பப்பட்டிருந்தது அது.

அந்த போத்தல், காகிதம் எதினாலும் சுற்றி வைக்கப்படாமலும், அதன் மீது விவரங்கள் எதுவும் ஒட்டப்படாமலும், ஆவணங்கள் எதுவும் இணைக்கப்படாமலும் இருந்துள்ளது.

பின்னர், அந்த மூளை கல்வி நிறுவனம் ஒன்றிற்கு பயிற்றுவிப்பதில் உதவுவதற்காக அனுப்பப்பட்டது தெரியவந்தது.

என்றாலும், நோய்தடுப்பு மற்றும் தவிர்ப்பு மையமும், அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனமும் இத்தகைய பொருட்களை அனுப்புவது தொடர்பாக கடுமையான கட்டுப்பாடுகளை பின்பற்றுவது குறித்து மக்கள் நினைவில் கொள்ளவேண்டும் என, அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லை பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

COURTESY US CUSTOMS AND BORDER PROTECTION

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்