கனடாவில் சர்வதேச மாணவர்களுக்கு இது இக்கட்டான நேரம்: சொல்கிறார் பொறுப்பிலிருக்கும் இலங்கை தமிழ் பெண்!

Report Print Balamanuvelan in கனடா

கொரோனா அச்சம் காரணமாக, கனடா குடிமக்கள் அல்லாதவர்கள் மற்றும் நிரந்தர குடியிருப்பு நிலை இல்லாதவர்கள் கனடாவுக்குள் நுழைய மார்ச் 18 முதல் தடைவிதித்து கனடா பிரதமர் உத்தரவிட்டுள்ளது, சர்வதேச மாணவர்களுக்கு இக்கட்டான சூழலை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக கனடாவிலுள்ள சர்வதேச அலுவலகங்கள் இதனால் மிகவும் குழப்பமடைந்துள்ளன.

மெமோரியல் பல்கலைக்கழகத்தில் சர்வதேச விவகாரங்கள் தொடர்பான அலுவலகத்தில் முக்கிய பொறுப்பு வகிக்கும் Sonja Knutson, மக்களுடைய சந்தேகத்தை தீர்க்கும் வகையிலான கேள்வி பதில்களை வெளியிடுகிறோம், ஆனால், நிலைமை மாறிக்கொண்டே இருப்பதால், வெள்ளிக்கிழமை சொன்ன பதில்கள் திங்கட்கிழமைக்கு பொருந்தவில்லை என்கிறார்.

எங்களுடைய கவனம் இப்போது பல்கலைக்கழக வளாகத்திலிருக்கும் சர்வதேச மாணவர்கள் மீதுதான் என்று கூறும் Sonja, அவர்கள் கனடாவிலேயே தங்கியிருக்கலாம் என்றாலும், பலரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

உடனடியாக சொந்த நாட்டுக்கு திரும்பவேண்டுமா, சொந்த நாட்டிலிருந்தே கல்வியைத் தொடரலாமா, அல்லது இங்கேயே தங்கியிருக்க வேண்டுமா என்ற குழப்பத்திலிருக்கிறார்கள் அவர்கள் என்கிறார் Sonja.

அதைவிட பெரிய பயம், சொந்த நாட்டுக்கு திரும்பினால் மீண்டும் கல்வியைத் தொடர கனடாவுக்கு திரும்ப முடியுமா என்பதுதான் என்கிறார் அவர்.

சரி, கனடாவிலேயே இருந்துவிடலாம் என்று முடிவெடுத்தால், தங்குவதற்கு பணம் வேண்டும்.

ஏற்கனவே, பல அலுவலகங்கள், பணியாளர்களைக் குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதால், வேலை கிடைக்குமா என்ற சந்தேகம் வேறு நிலவிவருகிறது. கனடாவில் ஒரு நிலையற்ற சூழல் நிலவி வருவதால், வரும் வாரங்களில் என்ன நடக்கும் என்பதை கணிப்பது கடினம் என்கிறார் Sonja.

ரொரன்றோ யார்க் பல்கலைக்கழகத்தில் சர்வதேச மாணவர்கள் தொடர்பான அலுவலகத்தில் முக்கிய பொறுப்பு வகிக்கும் தமிழரான வினிதா கங்காதரன், சிறுவயதில் இலங்கையில் கிளிநொச்சியில் படித்தவர்.

ஆயிரக்கணக்கான மைல்கள் கடந்து சொந்த நாட்டைவிட்டு வந்து ஆண்டுக்கு 35,000 முதல் 50,0000 டொலர்கள் வரை செலுத்தி கல்வி கற்கும் மாணவர்களுக்கு திடீரென ஏற்பட்டுள்ள இந்த சூழல் எப்படி இருக்கும் என்பதை சற்று எண்ணிப் பாருங்கள் என்கிறார் அவர்.

அவர்களை அழைத்துச் செல்ல அவர்களது பெற்றோரும் இங்கில்லாத நிலையில், உடனடியாக டிக்கெட் வாங்கி நாட்டுக்கு திரும்பவும் அவர்களிடம் பணம் இருக்குமா தெரியாது. தங்கள் எதிர்காலம் குறித்த கவலையுடனும் கேள்விகளுடனும் அவர்கள் தவிக்கிறார்கள்.

கல்வி நிறுவனத்துக்கு கட்டணம் செலுத்துவதற்காகவே பணம் முழுவதையும் செலவழித்துவிட்ட நிலையில், இனி அவர்கள் தற்காலிகமாக தங்குவதற்கான இடம் ஏற்பாடு செய்வதற்காக அவசரமாக பணம் புரட்டவேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.

இது அவர்களுக்கு சர்வதேச பிரச்சினைகளில் ஒன்று மட்டுமல்ல, இது கனடாவில் அவர்கள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சினை என்று கூறும் வினிதா, சர்வதேச மாணவர்களுக்கும், சொந்த நாடுகளுக்கு திரும்ப முடியாத நிலையிலிருப்போருக்கும் கனேடிய நிறுவனங்கள் எப்படி உதவப்போகிறது என்னும் விடயம் கல்வித்துறையில் ஏற்படுத்தப்போகும் தாக்கம், எதிர்காலத்தில் பல ஆண்டுகளுக்கு இருக்கும் என்கிறார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...