கொரோனா அச்சுறுத்தல்... வீடு தேடி வரும் பல்பொருள் அங்காடிகள்: தயாராகும் கனேடிய நிறுவனங்கள்!

Report Print Balamanuvelan in கனடா

கொரோனா கட்டுப்பாடுகள் வாடிக்கையாளர்களை தங்கள் வசதிக்கு பொருட்களை வாங்க முடியாமல் கட்டிப்போட்டுவிட்டன.

ஆகவே, விற்பனையாளர்கள் தங்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளை எப்படியாவது சந்தித்துவிட தங்களாலான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

எல்லாவற்றிற்கும் மேல், வியாபாரம் என்பது, விற்பவர் வாங்குபவர் என இரு தரப்பினருக்கும் லாபத்தைத் தரும் விடயம்தானே!

ஆக, மக்கள் சென்று பல்பொருள் அங்காடி ஒன்றின் முன் காத்து நிற்பதற்கு பதிலாக, அல்லது ஒன்லைனில் ஆர்டர் கொடுத்துவிட்டு வீட்டில் காத்திருப்பதற்கு பதிலாக, இனி புதியதோர் திட்டத்தை செயல்படுத்த இருக்கின்றன பல்பொருள் அங்காடிகள்.

Sysco

அது என்னவென்றால், மக்கள் பல்பொருள் அங்காடியைத் தேடி செல்வதற்கு பதிலாக பல்பொருள் அங்காடிகளே மக்களைத் தேடி வர இருக்கின்றன.

அதாவது, வீட்டுக்குத் தேவையான பொருட்களை ஏற்றிக்கொண்டு பெரிய பெரிய ட்ரக்குகள் இனி வீடுகளைத் தேடி வர இருக்கின்றன.

ட்ரக் எங்கே இருக்கிறது, எப்போது புறப்படும் என்பதையெல்லாம் தெரிவிக்க இருக்கவே இருக்கிறது தொழில்நுட்பம்.

ஆக, இனி அத்தியாவசியப் பொருட்கள் வீடு தேடி வர இருப்பதால் கனேடிய மக்களுக்கு மகிழ்ச்சிதான்!

Sysco

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்